கூடங்குளம் போராட்ட மக்கள் மீது விமானம் தாக்குதல்: வைகோ கண்டனம் கூடங்குளம் போராட்ட மக்கள் மீது விமானம் தாக்குதல்: வைகோ கண்டனம்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெ�® �ியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்தமிழ்நாட்டைப் பேரழிவுக்கு ஆளாக்கும் அபாயம் நிறைந்த, கூடங்குளம் அணு உலையை அகற்ற வேண்டும்; இயக்கக்கூடாது; யுரேனியம் எரிபொருள் நிரப்பக் கூடாது என்று, இந்தியாவில் எங்கும் நடைபெறாதவிதத்தில், அமைதி வழி அறப்போராட்டத்தை, ஓராண்டுக்கு மேலாக இடிந்தகரையில், அனைத்து சமுதாய மக்களும், மதங்களைக் கடந்து நடத்தி வருகின்றனர்.
தங்களது, கடல் வாழ் உயிர் ஆதார வாழ்க்கை அழிந்து போகும் என்று மீனவ மக்கள், குறிப்பாக தாய்மார்கள் வீரமும், தியாகமும் செறிந்த உன்னதமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
செப் 9 ஆம் தேதி அணு உலை முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்தபோதிலும், அணு உலைக்கு அருகில் செல்லாமல், 1/2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால், கடற்கரையில், சாத்வீகப் போராட்டம் நடத்தினர்.
ஆனால், 10 ஆம் தேதி, காலையில், காவல்துறையினர் தடியடியும், கண்ணீர்ப் புகைப் பிரயோகமும் செய்தனர். இதில், குழந்தைகள், பெண்கள், உட்படப் பலர் படுகாயம் உற்றனர். காவல்துறையினர், கூடங்குளத்துக்கு உள்ளே நுழைந்து, வீடுவீடாகப் புகுந்து, அங்குள்ள மக்களை, ஈவு இரக்கம் இல்லாமல் தாக்கினர்.
மணப்பாட்டில், காவல்துறையினர் சுட்டதில், அந்தோணி ஜான் என்ற மீனவர் கொல்லப்பட்டார். இடிந்தகரை, கூத்தன்குழி மீனவ மக்கள், கடலுக்குள் இறங்கி, கழுத்து அளவு தண்ணீரில் அறப்போராட்டம் நடத்தியது, உலகத்தில் எங்குமே நடைபெறாத மகத்தான போராட்டம் ஆகும்.
கூடங்குளம், இடிந்தகரை வட்டாரத்தில், இந்திய விமானப்படையின் சிறிய ரக போர் விமானங்கள் தாழ்வாகப் பறப்பதையும், கடற்படை ரோந்துப் படகுகள், அப்பகுதி கடலில் சுற்றுவதையும் குறித்து, நான் ஏற்கனவே கண்டன அறிக்கை விடுத்து இருந்தேன்.
சிங்களக் கடற்படை, நமது தமிழக மீனவர்கள், 570 பேரைச் சுட்டுக் கொன்றது. அதனை எந்தக் கட்டத்திலும் தடுக்க முடியாத இந்தியக் கடற்படை, சிங்களக் கடற்படையோடு கூட்டுச் சதி செய்கிறது. இந்தச் சூழ்நிலையில், இடிந்தகரை கடற்கரையில், கடல் நீருக்குள் இறங்கி அறப்போர் நடத்திய மீனவர்களை அச்சுறுத்தவும், தாக்க�® �ும் முனைந்து, இந்திய விமானப்படையின் சிறிய ரக போர்விமானம், தாழப் பறந்து இருக்கின்றது.
அதில், இடிந்தகரையைச் சேர்ந்த சகாயம் என்ற மீனவர், தலை உடைந்து, படுகாயம் அடைந்து உள்ளார். இந்திய விமானப்படை, ஒரு சமர்க்களத்தில் எதிரி நாட்டு மக்களைக் தாக்கிக் கொல்வதைப் போல, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றது.
இந்தத் தாக்குதல், இந்திய ஒருமைப்பாட்டின் சவப்பெட்டியின் மீது அடிக்கப்பட்ட ஆணி ஆகும். இந்தக் கொடூரத் தாக்குதலுக்குக் காரணமான இந்திய விமானப்படையினர் மீது, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். இந்திய ராணுவ அமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
காங்கிரஸ் தலைமை தாங்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக, தமிழக மக்கள் கிளர்ந்து எழுவார்கள். அதற்காக மக்கள் சக்தியை, முழு மூச்சாகத் திரட்டுவோம் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Post a Comment