News Update :
Home » » காப்பீட்டு திட்டத்தில் 10 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை:சென்னை அரசு பொது மருத்துவமனை முதலிடம்

காப்பீட்டு திட்டத்தில் 10 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை:சென்னை அரசு பொது மருத்துவமனை முதலிடம்

Penulis : karthik on Sunday 16 September 2012 | 23:36

காப்பீட்டு திட்டத்தில் 10 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை:சென்னை அரசு பொது மருத்துவமனை முதலிடம் காப்பீட்டு திட்டத்தில் 10 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை:சென்னை அரசு பொது மருத்துவமனை முதலிடம்
காப்பீட்டு திட்டத்தில் 10 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை:சென்னை அரசு பொது மருத்துவமனை முதலிடம்

சென்னை, செப்.17-

முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி தொடங்கப்பட்டது. ஏழை-எளிய மக்களுககு உயிர்காக்கும் உயர் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் 4 வருடத்துக்கு ரூ.4 லட்சம் வரை இத்திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாம்.

ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு கீழ் உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள். இருதயம், நுரையீரல், புற்றுநோய், சிறுநீரகம், எலும்பு முறிவு, நரம்பு, ரத்த நோய்கள், குடல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறலாம்.

750 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தமிழகம் முழுவதும் உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு முந்தைய மருத்துவ சோதனை தொடங்கி, வீட்டிற்கு சென்று மருத்துவம் பெறும் வரையிலான செலவுகள் அனைத்தையும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

தமிழக முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் அதிகமான நோயாளிகள் பயன்பெற்றது சென்னை அரசு பொது மருத்துவமனையாகும். பல்வேறு மருத்துவ துறையின் கீழ் சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் என இதுவரை 10 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சென்னை அரசு ஆஸ்பத்திரியே தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுப்பாட்டுக்கு கீழ் உள்ள எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, மகப்பேறு ஆஸ்பத்திரி, கண் மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனைகளிலும் இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக ்கது.

10 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு பதிவு செய்ததில் 7 ஆயிரம் பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றனர். 1,500 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிர் காக்கும் சிகிச்சை அளித்ததன் மூலமாக அரசு ஆஸ்பத்திரிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.25 கோடி கிடைத்துள்ளது. மீதமுள்ள 1500 பேர் சிகிச்சைக்கு தயாராக இருக்கிறார்கள்.

2-வது இடத்தில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு 12 ஆயிரம் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை அரசு ஆஸ்பத்திரி துறை தலைவர்கள் மூத்த டாக்டர்கள், உதவி பேராசிரியர்கள், மற்றும் ஒருங்கிணைந்த டாக்டர் குழுவினரின் கூட்டு முயற்சியால் இந்த சாதனையை செய்ய முடிந்தது.

7 மாதத்தில் 10 ஆயிரம் குடும்பங்கள் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மறுவாழ்வு பெற்றுள்ளனர் என்று டீன் கனகசபை தெரிவித்தார். சாதனை புரிந்த டாக்டர்கள், முதல்வரை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் நன்றி தெரிவிக்கும் பாராட்டு நிகழ்ச்சி சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நாளை நடக்கிறது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் கலந்து கொண்டு பாராட்டுகிறார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger