நேட்டோ படையின் வான்வழி தாக்குதல்: 8 ஆப்கானிஸ்தான் பெண்கள் பலி

காபூல், செப், 17 -
ஆப்கானில் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையினர் அவர்களின் மறைவிடங்களை கண்டு பிடித்து ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆப்கானின் கிழக்கு பகுதியில் உள்ள லாமன் என்னும் இடத்தில் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்திய விமானம் தாக்குதலில் நேற்று அப்பாவி பெண்கள் எட்டு பேர் கொல்லப்பட்டனர். இந் த தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்சாய் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். தவறுதலாக நடந்த இந்த தாக்குதல் குறித்து வருத்தம் தெரிவித்து அந்த சமுதாய மக்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் என்று பன்னாட்டு பாதுகாப்பு உதவி படையின் அதிகாரி ஒருவர் கூறினார். நேற்று முன்னதாக நடந்த ஒரு தாக்குதலில் அமெரிக்க பட� �யினர் 4 பேர் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment