திருவனந்தபுரம், செப். 17-
மத்திய அரசு டீசல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வுக்கு அனைத்து கட்சிகளும் லாரி உரிமையாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
அடுத்தக்கட்டமாக கேரளாவில் லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு உள்ளன. டீசல் விலை உயர்ந்து உள்ளதால் லாரி வாடகையை 30 சதவீதம் உயர்த்தி தரக்கூறி கேரளாவில் லாரி மற்றும் மினி லாரி உரிமையாளர்கள் இந்த பேராட்டத்தில் குதித்து உள்ளனர்.
இதனால் இன்று லாரி, மினி லாரிகள் கேரளாவில் ஓடவில்லை. இதனால் அத்தியாவசிய பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 20-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
home
Home
Post a Comment