மூன்று மாதமாக வீட்டில் பூட்டிவைக்கப்பட்ட பெண்: டெல்லியில் போலீஸ் மீட்பு

புதுடெல்லி, செப், 17 -
டெல்லியில் ஜெட்பூர் என்னுமிடத்தில் மூன்று பிள்ளைகளுக்கு தாயான கவிதா (32 வயது). தனது கணவர் தீபக் என்பவருடன் வசித்து வந்தார். இவர் கடந்த மூன்று மாதங்களாக தனது பெற்றோர்களுடன் பேசமால் இருந்து இருக்கிறார். பலமுறை பேச முயற்சித்தும் அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் தங்களது மகள் வீட்டின் பக்கத்து வீட்டிற� ��கு போன் செய்து தனது மகளை பார்த்து வரச் சொல்லியிருக்கின்றனர். அப்போது அவர்கள் நாங்களும் கவிதாவை பார்த்து இரண்டு மதங்களுக்கு மேலாக ஆகிவிட்டதாக என்று கூறி அவரது வீட்டிற்கு சென்று பார்த்து இருக்கிறார்கள். ஆனால் அங்கேயும் கவிதா இல்லை என்று தெரிய வர அதை அவரது பெற்றோர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த கவிதாவின் பெற்றோர்கள் போலீசார் துணைய� �டன் வீட்டிற்கு வந்து கவிதாவை தேடினர். அப்போது ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த கவிதாவை போலீசார் மீட்டுள்ளனர். மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்ட கவிதா எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறி அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து டெல்லி காவல் துறையினர் அவரது கணவர் தீபக்கிடம் விசார� �ை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Post a Comment