பாலிவுட்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற டெல்லி பெல்லி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்யா, சந்தானம் இணைகின்றனர். பாலிவுட்டில் அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த முழு நீள நகைச்சுவைப் படமான டெல்லி பெல்லி, இந்தி திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
டெல்லி பெல்லி படத்தினை விநியோகம் செய்ததால் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையும் யு.டிவி நிறுவனத்திடம் தான் இருக்கிறது. ஆகவே தமிழில் அப்படத்தினை யு.டிவி தயாரிக்க இருக்கிறார்கள். டெல்லி பெல்லி படம் குறித்து பல்வேறு தகவல்கள் கோடம்பாக்கத்தில் உலா வந்தன. அனைத்து தகவல்களையும் யு.டிவி நிறுவனம் மறுத்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் டெல்லி பெல்லி குறித்து செய்திகள் கோடம்பாக்கத்தை வலம் வர ஆரம்பித்துள்ளன. கொலிவுட்டின் பாஸ் கூட்டணி ஆர்யா, சந்தானம் நடிக்க கண்ணன் டெல்லி பெல்லியை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்வராகவன் இயக்கி வரும் இரண்டாம் உலகம் படத்தினைத் தொடர்ந்து இப்படத்தில் ஆர்யா நடிப்பார் என தெரிகிறது.
Post a Comment