நடிகை ல்க்ஷ்மி ராய் தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் அதிநாயகடு படத்தில் பிகினியில் வந்து ரசிகர்களை கிறங்கடிக்கப் போகிறார்.
தமிழில் நடிக்கையில் போர்த்திக் கொண்டும், தெலுங்கு படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டுவதும் நடிகைகளின் வழக்கமாகிவிட்டது. இதற்கு லக்ஷ்மி ராயும் விதிவிலக்கல்ல. தமிழில் காஞ்சனா, மங்காத்தா ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.
இந்நிலையில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் அதிநாயகடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு லக்ஷ்மி ராய்க்கு கிடைத்துள்ளது. இதனால் அவர் படுகுஷியாகக் காணப்படுகிறார். பரச்சூரி முரளி எழுதி, இயக்கும் இந்த படத்தில் சலோனி, சுகன்யா, கோட்டா சீனிவாச ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் லக்ஷ்மி ராய் நீச்சல் குளத்தில் இருந்து நீல நிற பிகினியில் வருவது போன்ற காட்சி உள்ளதாம். தெலுங்கில் கொடி கட்டிப் பறக்கும் அனுஷ்காவும், பிரியாமணியும் ஏற்கனவே பிகினியில் வந்து டோலிவுட் ரசிகர்களை அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாகவே லக்ஷ்மி ராய் கவர்ச்சிகரமாகத்தான் வருவார், இப்போது 'ப்ளூ' பிகினியில் வரப் போவதால் ரசிகர்கள் பாடு என்னாகப் போகிறதோ என்ற பெரும் 'பரபரப்பு' ஏற்பட்டுள்ளது.
Post a Comment