அபிஷேக்-ஐஸ்வர்யா தம்பதியரின் மகளுக்கு அபிலாஷா என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர். முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு கடந்த நவம்பர் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போதைக்கு குழந்தைக்கு செல்லமாக "பேட்டி பி" என்ற பெயர் வைத்துள்ளனர். மேலும் குழந்தைக்கு "ஏ" வரிசையில் பெயர் வைக்க வேண்டும் என்றும், இதற்காக ரசிகர்களிடம் ஒரு நல்ல பெயரை சொல்லுங்கள் என்று அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகியோர் தங்களது ட்விட்டர் வலைதளத்தில் குறிப்பிட்டு இருந்தனர். இதையடுத்து லட்சக்கணக்கான பெயர்கள் வந்து குவிந்தன.
இந்நிலையில் மூன்று மாத தேடலுக்கு பின்னர் ஒரு நல்ல பெயரை தேர்ந்தெடுத்துள்ளனர் அபிஷேக்-ஐஸ்வர்யா தம்பதியினர். குழந்தைக்கு அபிலாஷா என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர். தற்போது அமிதாப், உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமுடன் வீடு திரும்பிய பின்னர், குழந்தையின் பெயர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.
Post a Comment