மத்திய அரசின் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் திரையுலகம் சார்பில் இன்று (23ம்தேதி) ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறது. இதையொட்டி சினிமா சூட்டிங்குகள் மற்றும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. திரையுலகத்துக்கான சேவை வரியை 30 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. இதற்கு நாடு முழுவதும் உள்ள திரையுலக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஸ்டிரைக்கில் ஈடுபட திரையுலக சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து இந்திய திரையுலக சம்மேளன தலைவர் வினோத் கே.லம்பா கூறுகையில், திரையுலகம் ஏற்கனவே ஏராளமான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. ஏறக்குறைய 95 சதவீத படங்கள் தோல்வி அடைகின்றன. 5 சதவீத படங்கள்தான் வெற்றி பெறுகின்றன. சினிமாவுக்கு ஏற்கனவே பொழுதுபோக்கு வரி விதிக்கப்பட்டு வருகிறது. எனவே சேவை வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். சேவை வரியை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும் இந்திய திரையுலக சம்மேளனம் ஒரு முழுமையான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருக்கிறது. இதற்காக, இன்று(நாளை -23ம்தேதி) நாடு தழுவிய அளவில் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்படும். ஸ்டூடியோக்கள் மூடப்படும். படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். திரையுலகம் சம்பந்தப்பட்ட அத்தனை அமைப்புகளும் நாளை ஒரு நாள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன, என்றார்.
Post a Comment