ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணமானது தெரியும் என்றும், அவரைத்தான் கல்யாணம் பண்ணுவேன் என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம் நடிகை அனன்யா. நாடோடிகள், சீடன், எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை அனன்யா. மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கும், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆஞ்சநேயன் என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் இந்த திருமண நிச்சயம் நடந்தது.
இந்நிலையில் ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து, அதை மறைத்துவிட்டதாக அனன்யாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். இதனால் இவர்களது திருமணத்திற்கு சிக்கல் உருவானது. இதனிடையே தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனது அனன்யாவுக்கு தெரியும் என்றும், அவர் தான் அவரது தந்தையிடம் மறைத்துவிட்டார் என்று ஆஞ்சநேயன் கூறியிருந்தார். மேலும் அனன்யாவுக்கு, ஆஞ்சநேயனை திருமணம் செய்ய விருப்பம் தான் என்றும், அனன்யா பெற்றோருக்குத்தான் இதில் விருப்பம் இல்லை என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்நிலையில் ஆஞ்சநேயனை மணப்பதில் உறுதியாக இருக்கிறார் அனன்யா. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, என்னுடைய திருமணம் பற்றி தேவையில்லாத வதந்திகள் பரவி வருகிறது. அதைப்பற்றி கவலைப்பட போவது இல்லை, இது எங்களுடைய உறவை வலுப்படுத்தும். உறுதியாக ஆஞ்சநேயனைத்தான் திருமணம் செய்வேன். அது விரைவில் நடக்கும் என்று கூறியுள்ளார்..
Post a Comment