பத்திரிகையாளராக இருந்து தன் கடின உழைப்பால் இன்று ஒரு நடிகராக , தயாரிப்பாளராக, தலைமை தாங்குபவராக, சினிமா, அரசியல் ,நட்சத்திர கிரிக்கெட் என்று தினம் தினம் ஓடி ஓடி உழைக்கும் சரத்குமாரின் வளர்ச்சி எல்லாரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது. நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சரத்குமார் சில பத்திரிகை குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவி தொகையும் வழங்கினார். அவர் பேசுகையில்,
கடந்த சில வருடங்கள் ரொம்ப ப்ரீயா இருந்தேன். என் படங்களை வாங்க வணிக ரீதியாக சில பிரச்னைகள் இருந்தது. அதை எல்லாம் கடந்து, இப்போது நான் ரொம்ப பிசியா இருக்கேன்; மலையாளத்தில் நான் நடித்த பழசி ராஜா படம் என்னை பேச வைத்தது; தளபதியாக சரித்திர ரோலில் மம்முட்டியுடன் நடித்தது மறக்க முடியாது. தொடர்ந்து பல படங்கள் நடித்து கொண்டிருக்கேன். தற்போது கூட அச்சண்ட ஆண்மக்கள் என்ற படத்தில் கோவை போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதை அடுத்து கன்னடத்தில் தர்ஷன் ஹீரோவா நடித்த படத்தில் கெஸ்ட் ரோல் பண்றேன். சூப்பர் ஹிட் படம்; தொடர்ந்து நடிக்க கதை கேட்டு வரேன்,
தெலுங்கில் சில படங்களில் நான் நடித்திருந்தாலும் சமீபத்தில் வெளிவந்த காஞ்சனா படம் மிக பெரிய பேரை தந்தது. அந்த படத்தில் அரவாணி ரோலில் நடிக்க வேண்டும் என்று லாரன்ஸ் கேட்ட போது உடனே எஸ் சொன்னேன். ஏன்னா படத்தில் ஒரு நல்ல மெசேஜ் சொல்லும் ரோல் அது. எங்க போனாலும் எனக்கு ஒரு பெரும் பேர் கொடுத்த படம் காஞ்சனா. தமிழ்ல சினேகாவுடன் நான் நடித்த விடியல் படம் பாதியில் உள்ளது. அந்த படம் கூட சுதந்திரம் முன், சுதந்திரம் பின் என்று எடுக்கப்படும் படம். மே ரிலீஸ் செய்ய பிளான் இருக்கு. இதை அடுத்து நம்ம ஊரில் நடந்த உண்மை சம்பவம்; மூளை சாவில் இறந்த ஒருவரின் இதயத்தை வேறு ஒருவருக்கு பொருத்தி உயிர் பிழைக்க வைத்த கதை. இதை மலையாளத்தில் டிராபிக் என்று படமாக்கி இருந்தனர். படம் பெரும் வெற்றி பெற்றது. அந்த படம் இப்போது தமிழில் எடுக்க போகிறோம். அதில் நான் உயிர் காப்பாற்றிய டிரைவராக நடிக்க போறேன்,
மேலும் ராதிகா, பிரகாஷ் ராஜ், ரம்யா நபீசன் போன்றோர் நடிக்க உள்ளனர். மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்போது எல்லாரும் கேட்டு கொண்டிருக்கும் செய்தி நான் ரஜினியுடன் நடிக்க போவது; சௌந்தர்யா இயக்கும் படத்தில் நான் ரஜினியுடன் நடிக்க போறேன்; இப்பதான் போட்டோ சூட் முடிந்தது; ரொம்ப ஆர்வத்தோட இருக்கேன் ரஜினியுடன் நடிக்க, என் அரசியல் வாழ்க்கையும் ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு; தென்காசியில மாதம் சில நாட்கள் தங்கி இருந்து அந்த பணியையும் சிறப்பாக செய்கிறேன். அங்கு எனக்கு சில ஆட்கள் உதவி செய்கின்றனர். நடிகர் சங்கத்திலும் என் பணியை திட்டமிட்டு செய்கிறேன். இப்போது பெப்சி பிரச்சனை குறித்து இரு தரப்பிலும், நாங்களும் பேசி வருகிறோம்,. விரைவில் நல்ல முடிவு கிடைக்கும். என் மகள் வரலெட்சுமி பத்தி சொல்லனும்னா அவங்களோட மியூசிக் டான்ஸ் ஆர்வம் பார்த்தேன். சினிமான்னு அவங்க முடிவு பண்ணி அனுபம் கேர் நடிப்பு கல்லூரியில் சேர்த்துவிட சொன்னாங்க. சேர்த்து விட்டேன். நல்லா முடிச்சிட்டு வந்திட்டாங்க. இப்ப சிம்புவுடன் போடா போடி படத்தில் நடிச்சிட்டு இருக்காங்க. அப்புறம் நாகார்ஜுன் மகனுடன் தமிழ் தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க போறாங்க, இனி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நல்ல படங்கள் பண்ணுவேன், என்றார்.
எந்த மொழியில் படம் பண்ணாலும் ரசிகர்கள் ரொம்ப எதிர் பார்ப்பது சூப்பர் ஸ்டாரும் சுப்ரீம் ஸ்டாரும் இணையும் கோச்சடையான் பார்க்க தான் , வாழ்த்துக்கள் சரத் சார்,
Post a Comment