விஸ்வரூபத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
கொலிவுட்டில் உலக நாயகன் கமல் ஹாசன் விஸ்வரூபம் திரைப்படதை இயக்கி நடிக்கிறார்.
சுமார் 120 கோடி செலவில் உருவாகும் விஸ்வரூபத்தில் கமல்ஹாசனுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இதுகுறித்து நாயகி ஆண்ட்ரியா கூறியதாவது, அதிக பொருட் செலவில் உருவாகும் இப்படத்தில் பணியாற்றுவதை நினைத்து பெருமை அடைகிறேன்.
கமல் ஹாசன் அவர்கள் சிறந்த நடிகராக மட்டுமின்றி எழுத்தாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றுகின்றார்.
படப்பிடிப்பில் படைப்பாற்றல் உள்ள மேதையாக இயங்கினாலும் அவருக்கே உரிய நகைச்சுவையால் என்னை ஈர்த்துள்ளார். படப்பிடிப்பில் உள்ளவர்களிடம் சுவாரஸ்யமான பல விடயங்களை பகிர்ந்து கொள்வார்.
அவருக்கே உரிய பாணியில் படக்குழுவினரோடு இணைந்து பணியாற்றுவதை கண்டு பிரமித்து போனேன் என்று விஸ்வரூபம் நாயகி ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
Post a Comment