கோவில்பட்டி அருகே நள்ளிரவில் காதலனை தாக்கி, காதலியை கடத்தி கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி, புதுரோடு ராஜேந்திரன் மகள் சுபாஸ்ரீ,26. எம்.சி.ஏ., முடித்துள்ளார்.
இவரும், இதேபகுதி நாராயணசாமி மகன் பி.இ.,பட்டதாரி காளிராஜூம், 27, சில ஆண்டாக காதலித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணியளவில் இவர்கள் பைக்கில் வீட்டிலிருந்து புறப்பட்டனர்.
நள்ளிரவு 11 மணியளவில், கோவில்பட்டி - தூத்துக்குடி ரோட்டில், திட்டங்குளம் அடுத்த கருங்காலிப்பட்டி ஓடை அருகே சென்றபோது, மர்ம நபர்கள் இருவர், இவர்களை வழிமறித்தனர். காளிராஜை தாக்கிய அவர்கள், சுபாஸ்ரீயை கடத்தினர். உடனடியாக மெயின்ரோட்டிற்கு ஓடிவந்த காளிராஜ், அங்கு வந்த பஸ்சை வழிமறித்து நடந்த சம்பவத்தை கூறினார்.
இதையடுத்து, பஸ் பயணிகள் காட்டுப்பகுதியில் விரட்டிச்சென்று ஒரு வாலிபரை பிடித்து, சுபாஸ்ரீயை மீட்டனர். விசாரணையில், பிடிபட்டவர் கோவில்பட்டி, சிதம்பராபுரம் சங்கரமூர்த்தி மகன் கண்ணன், 21, எனத்தெரியவந்தது. அவரை நாலாட்டின்புத்தூர் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய இவரது நண்பர் செல்வக்குமாரை, தேடி வருகின்றனர்.
Post a Comment