நாள் ஒன்றுக்கு 20 சிகரெட் பிடிக்கிறேன் என்றார் நடிகை மது ஷாலினி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
அவன் இவன் படத்தையடுத்து ராம் கோபால் வர்மா இயக்கும் 'டிபார்ட்மென்ட்' இந்தி படத்தில் ரவுடி கூட்டத்தின் தலைவியாக நடிக்கிறார் மது ஷாலினி.
இதற்காக தினமும் 20 சிகரெட் புகைக்கிறார். இது பற்றி அவர் கூறுகையில் சிகரெட் வாடையே எனக்கு பிடிக்காது.
அதை பிடிப்பவர்களையும் அடியோடு வெறுக்கிறேன். ஆனால் இப்படத்தில் சிகரெட் பிடித்து நடிக்கிறேன்.
நடிப்பு எனது தொழில் என்பதால் இதற்கு சம்மதித்தேன். எப்போது படம் முடியும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்ததும் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிடுவேன்.
வேடத்துக்காக சிகரெட் பிடிக்க கற்றுக்கொண்டதே கஷ்டமான அனுபவம். காட்சியில் நடிக்கும்போது ஒவ்வொரு நாளும் குறைந்தது 20 சிகரெட்டாவது பிடிக்கிறேன்.
பலமுறை மறுத்த பிறகும் என்னையும் இயக்குனர் ராம்கோபால் வர்மாவையும் இணைத்து நிறைய கிசுகிசு வருகிறது. அதெல்லாம் வெறும் வதந்திதான். தொழில் ரீதியாகத்தான் நாங்கள் பழகுகிறோம். இவ்வாறு மது ஷாலினி கூறினார்.
Post a Comment