தமிழில் சீஸனுக்கேற்ப வந்து போகும் நடிகைகளில் ஒருவர் செரீன். துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் அறிமுகமானவர், தொடர்ந்து பரபரப்பாக சில படங்களில் நடித்தார்.
பின்னர் திடீரென காதல், பெற்றோருடன் தகராறு, தனிக்குடித்தனம் என்று போனவர், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். உற்சாகம் போன்ற சில படங்களுக்குப் பின் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. மீண்டும் இப்போது அபாயம் படத்தின் இரு நாயகிகளுள் ஒருவராக நடித்துள்ளார்.
இந்தப் படம் தெலுங்கில் கிருஷ்ணவம்சி இயக்கத்தில் வெளியான டேஞ்சர் என்ற படத்தின் தமிழ்ப் பதிப்பாகும்.
தான் மீண்டும் நடிக்க வந்தது குறித்து செரீன் இன்று நிருபர்களிடம் பேசுகையில், "படிப்பதற்காக இத்தனை நாள் வெளிநாட்டுக்குப் போயிருந்தேன். ஆஸ்திரேலியாவில் ஓவியம் மற்றும் கலை சம்பந்தப்பட்ட கோர்ஸ் படித்தேன் (குறிப்பாக எந்த படிப்பு என்று அவர் சொல்லவில்லை!).
இனி நடிப்பில் கவனம் செலுத்துவேன்," என்றார்.
அவரிடம், உங்களுக்கு ஏகப்பட்ட காதலர்கள் இருக்கிறார்களாமே… இப்போது யாருடன் காதல் என்று கேட்டதற்கு, "எனக்கு நிறைய பாய் ப்ரெண்ட்ஸ் உள்ளனர். அது கணக்கே இல்லை. ஆனால் யாருடனும் காதல் இல்லை. இப்போதைக்கு என் காதல் வீட்டில் நான் வளர்க்கும் நாயுடன்தான். அந்த நாய்க்குப் பெயர் வெண்ணிலா," என்றார்.
Post a Comment