இந்த வருடம் அதிக படங்களில் நடிக்க இலக்கு வைத்திருப்பதாக சொன்னார், த்ரிஷா.இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு இந்தியில் நடிக்கச் சென்றதால், தமிழில் சிறிது இடைவெளி ஏற்பட்டது. இந்த ஆண்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறேன். தமிழில் 3 படங்கள், தெலுங்கில் 3 படங்களில் நடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருக்கிறேன்.
கமர்ஷியல் படங்கள் மட்டுமின்றி, நல்ல கதையம்சமுள்ள படங்களையும் தேர்வு செய்து நடிப்பேன். 'வாமனன்' இயக்குனர் அகமது சொன்ன கதை என்னைப் பெரிதும் கவர்ந்தது. என் நடிப்புத்திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்புள்ள கதை. ஜீவா ஹீரோ. முதல்முறையாக அவருடன் ஜோடி சேர்கிறேன்.
Post a Comment