சேலம் அன்னதானப்பட்டி லைன்மேடு வேலுதெருவை சேர்ந்தவர் தர்மன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு செல்வி (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற மகள் உள்ளார். இவர் குகை பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
இதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பாண்டியன் (28). இவர் செல்வியை காதலித்து வந்தார். கடந்த 12 ந்தேதி இரவு செல்வியை, பாண்டியன் பேசுவதற்கு தனது வீட்டின் குளியலறைக்கு அழைத்தார்.
இதையடுத்து அங்கு வந்த செல்வியை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்த பாண்டியன், நான் உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அவரை கற்பழித்து உள்ளார்.
இதையடுத்து செல்வி நடந்த சம்பவங்களை தனது தாய் லட்சுமியிடம் கூறினாள். அவர் பாண்டியன் வீட்டிற்கு சென்று தனது மகளை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டார். அதற்கு பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
இதையடுத்து லட்சுமி அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியன் அவரது தந்தை ராஜேந்திரன், தாய் கோகிலா, தாத்தா சுப்பையா ஆகியோரை கைது செய்தனர்.
Post a Comment