நடிகர் கார்த்தி ஷங்கர் தயால் இயக்கத்தில் நடித்துவரும் படமான சகுனி படப்பிடிப்பின் கடைசி கட்டத்தை நெருங்கிவிட்டதால் சுராஜ் இயக்கத்தில் அலெக்ஸ் பாண்டியன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார்.
இந்த படங்கள் முடிந்ததும் மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சாந்தகுமார் இயக்கத்தில் நடிக்கிறார். சாந்தகுமாரின் மௌனகுரு செம ஹிட். சாந்தகுமார் ஒரு நல்ல கதையை கார்த்தியிடம் கூறியதாகவும், கார்த்தி உடனடியாக ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.
இந்த படத்தையும் கார்த்தியின் உறவினரான பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் தயாரிக்கிறாராம். கார்த்தி நடிக்கும் படங்களின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெருகிக் கொண்டே போகிறது.
Post a Comment