தமிழில் பொல்லாதவன், ஆடுகளம் என இயக்கியது இரண்டு படங்கள் தான் என்றாலும், அதில் ஒரு படத்திற்கு தேசிய விருது வாங்கி சாதித்திருப்பவர் வெற்றிமாறன். பெயரிலேயே வெற்றியை கொண்டு, டைரக்ஷ்னில் வெற்றி கண்ட வெற்றிமாறன், அடுத்தபடியாக தயாரிப்பிலும் கால்பதித்து உள்ளார். புதிதாக கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி ஒன்றை தொடங்கி இருக்கிறார். இதில் சித்தார்த்தை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். தன்னிடம் உதவியாளராக இருந்த மணிகண்டன் என்பவரை இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதரிக்க வைக்கிறார். படத்தை தயாரிப்பதுடன் கதையும், திரைக்கதையும் அமைத்து இருக்கிறார் வெற்றி. அப்படியே தன்னுடைய ஆஸ்தான நடிகரான கிஷோரையும் இந்தபடத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க வைக்கிறார். படத்திற்கு என்.ஹெச்-4 என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது கதாநாயகிக்கான தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. படம் பற்றிய முழு அறிவிப்பு மார்ச் முதல்வாரத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதனிடையே நடிகர் சித்தார்த்தும் இதனை உறுதிபடுத்தி இருக்கிறார். தன்னுடைய ட்விட்டர் வலைதளத்தில், தான் வெற்றிமாறன் தயாரிப்பில் நடிக்கப்போவதாகவும், அதற்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
Post a Comment