நடிகை ஸ்ரேயாவுக்கு நிறைய தோழிகள் உள்ளனர். சக நடிகைகளிடமும் நட்பு பாராட்டுகிறார். இதுகுறித்து ஐதராபாத்தில் ஸ்ரேயா அளித்த பேட்டி வருமாறு:-
சினிமாவில் நடிகைகள் ஒருவருக்கொருவர் நட்பாக இருப்பது இல்லை என்றும் ஒருவர் மற்றவர் மேல் பொறாமைப்படுவதும் பகையாக இருப்பதும் சகஜம் என்றும் கூறுவார்கள். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. நான் சக நடிகைகளுடன் நட்பாக இருக்கிறேன்.
திரிஷாவும், காஜல் அகர்வாலும் எனக்கு நெருங்கிய தோழிகளாக உள்ளனர். திரிஷாவிடம் ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவேன் அவரும் எல்லா விஷயங்களையும் என்னோடு பகிர்ந்து கொள்வார். காஜல் அகர்வாலுக்கும் எனக்கும் மூன்று வயது வித்தியாசம் உண்டு.
ஆனாலும் நெருங்கிய தோழிகளாக இருக்கிறோம். சமீபத்தில் படப்பிடிப்புக்கு சென்ற போது இருவரும் ஒரே ஓட்டலில் பக்கத்து பக்கத்து அறையில் தங்கினோம். இருவரும் இரவு நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது காதலர் தினம் கொண்டாடுவது பற்றி பேச்சு வந்தது. எனக்கு காதலர் தினம் கொண்டாடுவது பிடிக்காது.
அதில் நம்பிக்கையும் கிடையாது என்றேன். மறுநாள் காஜல் அகர்வாலிடம் இருந்து கடிதத்துடன் சிறிய பெட்டி ஒன்று வந்தது. பெட்டியில் ரோஜாப்பூ இருந்தது. கடிதத்தை பிரித்து படித்தேன். அதில் காதலர் தினம் பிடிக்காத எனது சினேகிதிக்கு காதலர் தின வாழ்த்துக்கள் என்ற வாசகம் இருந்தது. அது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அக்கடிதத்தை பத்திரமாக வைத்துள்ளேன்.
இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.
Post a Comment