கொலிவுட் நாயகன் கார்த்தி நடிக்கும் புதிய திரைப்படத்திலிருந்து நாயகி மேக்னா விலகியுள்ளார்.
கொலிவுட் நாயகன் கார்த்தி சகுனி திரைப்படத்திற்கு பின்பு சுராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் நாயகன் கார்த்தியுடன் நடிப்பதற்கு நான்கு நாயகிகளை இயக்குனர் சுராஜ் ஒப்பந்தம் செய்திருந்தார்.
கார்த்திக்கு ஜோடியாக முன்னணி நாயகி அனுஷ்கா நடிக்கிறார். இவரைத் தொடர்ந்து நிகிதா, மேக்னா, சனுஷா ஆகியோரை சுராஜ் ஒப்பந்தம் செய்திருந்தார்.
இந்நிலையில் மேக்னா இந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுபற்றி மேக்னா கூறியதாவது, எனக்கு படத்தில் தரப்பட்ட வேடம் திருப்தியாக இல்லை. சுராஜ் என்னுடைய நண்பர்.
என்னுடைய கருத்தை சொல்ல வாய்ப்பு தந்தார். நான் படத்திலிருந்து விலக விரும்புவதாக தெரிவித்தபோது அதை ஏற்றுக்கொண்டார்.
மேலும் மற்றொரு படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றலாம் என்று சுராஜ் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
தற்போது மலையாள படங்களில் நடித்து வருவதாகவும் மேக்னா தெரிவித்துள்ளார்.
Post a Comment