News Update :
Home » » ஆங்கில மொழி புலமையை அதிகரிக்க அசத்தலான ஐடியாக்கள்!

ஆங்கில மொழி புலமையை அதிகரிக்க அசத்தலான ஐடியாக்கள்!

Penulis : karthik on Friday 27 January 2012 | 08:21

கணினித் திரையூடாக உங்கள் இதயங்களை இணைத்து, இணைய வலையினூடே இப்
பதிவினைப் படிக்கவந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!
தாய்த் தேச உறவுகள் அனைவருக்கும் இனிய குடியரசுத் திருநாள் நல்
வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
ஆங்கிலம் என்றால் நம்மில் அதிகளவானோருக்கு ஓர் இனம் புரியாத கசப்புணர்வு
ஏற்படும். சிலரைப் பார்த்தால் ஆங்கில மொழியில் நன்கு தேர்ச்சி
பெற்றவர்களாக எழுத்து, வாசிப்புஆகிய துறைகளில் நன்றாக
வெளுத்துகட்டுவார்கள். ஆனால் பேசும் போது பம்மிடுவாங்க. இன்னும் சிலரைப்
பார்க்கையில் நம்மில் சிலருக்கு "அடடா இவனு ரொம்ப நல்லா இங்கிலீசு
பேசுறானே...நம்மால முடியலையே" என்கிற தாழ்வு மனப்பான்மை ஏற்படும்.
இன்னும் சிலர் என்னா பண்ணுவாங்க என்றால் நம்ம டீவி, ரேடியோக்களில்
புரோக்கிராம் பண்றவங்க மாதிரி ஒரு வசனம் பேசும் போது மூனு தமிழ்ச்
சொற்களையும், நாலு ஆங்கிலச் சொற்களையும் கலந்து கட்டிப் பேசுவாங்க. இவங்க
பேசும் இங்கிபீசைக் கேட்டால் நம்மளுக்கு இருக்கிற ஆங்கில அறிவும்
பறந்தோடிப் போயிடுமுங்க.
இந்தப் பதிவோட நோக்கம், நமது ஆங்கில அறிவினை அதிகரிப்பதற்கான இலகுவான
வழிகளைப் பற்றி அலசுவதாகும்.
பல்தேசக் கம்பனிகளின் தொழிற் புரட்சியானது இன்றைய கால கட்டத்தில் நம்
நாடுகளை நோக்கி அதிகளவில் இடம் பெறுகின்றது. இதனால் நாம வேலை தேடிப்
போகும் போது ஆங்கிலத்தில் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருக்கின்றோம் எனப்
பரிசோதிக்கும் முறையினை ஒவ்வோர் கம்பனிகளும் கையிலெடுத்திருக்கிறாங்க.
சிலருக்கு எவ்வளது தான் தலை கீழா நின்னாலும் ஆங்கில அறிவினைஇம்ப்ரூப்
பண்ணிக்கவே முடியாம இருக்கும். இதுக்கான பிரதான காரணம் சில ஈஸியான வழிகள்
இருக்கையில் ஆங்கிலத்தை முழுமையாக மனப்பாடம் செஞ்சு கரைத்து
குடிச்சிட்டு; வாந்தியெடுப்பது போன்று பேசுவதற்கு ரெடியாகுவது தானுங்க.
உங்களில் எத்தனை பேரிடம் 90 நாட்களில் இலகுவாக ஆங்கிலம் படிப்பது எனும்
புக் இருக்கிறதோ? அவங்க எல்லோரும் இன்னைக்கே அந்த புக்கை தூக்கி தூர
வீசிடுங்க.
இனி நம்ம ஐடியாக்கள் என்னான்னு பார்ப்போமா?
*எம்மால் இயன்றவரை வழுவின்றி தெளிவான உச்சரிப்புக்களை கையாளப் பழக
வேண்டும். எல்லோருக்கும் உச்சரிப்பு விடயத்தில் சில ஆங்கிலச் சொற்களை
இலகுவாகச் சொல்ல முடிவதில்லை. இதற்கு நாம என்ன பண்ணிக்கனும் என்றால்
Tongue Cleaner வாங்கி நம்மளோட நாக்கில இருக்கிற அழுக்கினை ஒவ்வோர்
நாளும் மளித்து எடுக்கனும்.
*அடுத்த கட்டமாக ஆங்கில நிகழ்ச்சிகளின் வீடியோ தொகுப்பினை உன்னிப்பாக
பார்க்கனும். வீடியோ தொகுப்புக்களில் டாக்குமென்டரிவகை வீடீயோக்கள்
ரொம்பமும் பயனுள்ளவை. Animal Planet, BBC World, National Geography
Channel, முதலிய சானல்கள் ரொம்பவே பயனுள்ளவை. இதனை விடவும் உங்களுக்கு
தெரிந்த ஆங்கில விவரணச் சித்திரங்களை ஒளிபரப்பும் சானல்களும் ரொம்ப
யூஸ்புல்லா இருக்குமுங்க.
*அடுத்த முக்கிய விடயம், நம்ம ரசனைக்கு ஏத்த மாதிரி நம்மளை மிகவும்
கவர்ந்த ஆங்கில டீவி நிகழ்ச்சியினை பார்ப்பது. இந்த விடயத்தில்
விளையாட்டுப் பிரியர்களுக்கு கிரிக்கட் நேரடி வர்ணனை, மற்றும் இதர
நேரடிவர்ணனைகள் ரொம்பவே பயனுள்ளதாக இருக்குமுங்க.
*அடுத்த மிக மிக முக்கியமான விடயம், பேசுவோரின் வாயினை உன்னிப்பாக
கவனிக்க வேண்டும். ஆங்கிலத்தில் British English உச்சரிப்பு, American
English உச்சரிப்பு, ஆஸ்திரேலியர்களின் ஆங்கில உச்சரிப்பு, ஆகியவை
கொஞ்சம் வேறுபாடு உடையவை. இதில் பிரித்தானியர்களின் ஆங்கில உச்சரிப்பானது
நமக்கு நன்கு பரிச்சயமாகும் வரை எளிதில் புரிந்து கொள்ள முடியாதவாறு
இருக்கும். அதுவும் ஆரம்பத்தில்நாம British ஆங்கில உச்சரிப்புக்களை
கேட்கும் போது ஒன்னுமே புரியாத மாதிரி, ரொம்ப வேகமாக பேசுவது போல
இருக்கும். ஆனால் அவங்க வாயினை உன்னிப்பாக அவதானித்து, கூர்மையாக என்ன
பேசுறாங்க என்று கவனித்தால் கண்டிப்பாக நமக்கு அவங்களின் உச்சரிப்பு
புரியும்.
*கதைப் புத்தகங்கள், மற்றும் ஆங்கில நூல்களை வாசித்தல். இதுவும் எமது
பேச்சுத் திறனை அதிகரிக்க வாய்ப்பாக அமையும். எப்பவுமே சிறிய சிறிய கதைப்
புத்தகங்களிலிருந்து ஆரம்பித்து படிப்படியாக; கடினமான மொழி நடையில்
அமைந்த ஆங்கில நூல்களை வாசிக்க முயற்சிப்பது நன்மை பயக்கும்.கதைப்
புத்தகங்களை நாமபடிக்கும் போது, அதில் உள்ள உரையாடல் பாணியிலான தகவல்களை
கிரகித்துப் படிப்பதும், எமது பேச்சு வன்மையினை அதிகரிக்க வாய்ப்பாக
அமையும்.
*இந்த ஐடியாக்களை விட; இன்னும் ஓர் ரொம்ப சூப்பரான + கொஞ்சம் காமெடியான
விடயம் இருக்கு.அது என்னவென்று தெரியுமா? கால்சென்டர்களுக்கு போன்
செஞ்சு, ஆங்கிலத்தில் உரையாடுவதும், கடலை போடத் தொடங்குவதும் உங்கள்
பேச்சு வன்மையினை சபைக் கூச்சமின்றி அதிகரிக்க உதவும். உங்க சொந்தப்
பேரில் பேசினால் பல்பு வாங்கிடுவீங்க என்று நினைத்தால், கண்டிப்பாக நீங்க
ஒரு புனை பெயரைத் தெரிவு செய்து உரையாடலாம். ஏர்டெல், ஏர்செல், அலைபேசி
நிறுவனங்கள், மற்றும் வங்கிகளுக்கு போன் செஞ்சு நீங்கஉந்த முறையினை ட்ரை
பண்ணிப் பேசிப் பார்க்கலாம்.
*உங்கள் அலுவலகத்தில் அல்லது நீங்கள் காவிச் செல்லும் பையில்கண்டிப்பாக
ஒரு ஆங்கில டிக்சனரிவைத்திருங்கள். ஒரு நாளைக்கு பத்துப் புதிய சொற்கள்
வீதம் ஒவ்வோர் நாளும் தேடிப் பிடித்துஅந்தச் சொல்லுக்கான அர்த்தங்களையும்
அறிந்து நினைவில் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இந்த ஐடியாவும்
உங்களுக்கு கை கொடுக்கும்.
இந்த ஆலோசனைகளை விட, வாசகர்கள் வசம் ஆங்கில மொழிப் புலமையை அதிகரிக்க
ஆலோசனைகள் இருந்தால் பின்னூட்டங்கள் ஊடாகப் பகிர்ந்து கொள்ளலாம்.
இப் பதிவு யாருக்கும் அறிவுரை கூறும் பதிவு அல்ல. ஐ மீன் இது ஓர் அட்வைஸ்
பதிவு அல்ல. என்னுடைய வாழ்வில் நான் பெற்ற அனுபவங்களை இங்கே
பகிர்ந்திருக்கிறேன்.ஆங்கில மொழிப் புலமையினை அதிகரிக்க விரும்பும்
ஆர்வலர்களுக்கு சிறிதளவேனும் இந்த ஆலோசனைகள் உதவினால் மகிழ்ச்சியாக
இருக்கும்.
பதிவினைத் தூய தமிழில் எழுத முடியவில்லை. காரணம் பலருக்கு புரிந்து
கொள்வதில் சிக்கல் இருக்கலாம் என்பதால் ஆங்காங்கே ஆங்கில வார்த்தைகளையும்
சேர்த்திருக்கிறேன
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger