இங்கு வருகைதரும் அண்ணன் அவர்களை வருக...வருக...என்று வரவேற்கிறேன்
ஆஹா....வரவேற்பெல்லாம் பலமா இருக்கே....என்ன விஷயம்?
ஒரு விஷயமும் இல்லை. சும்மாதான். சரி..எங்கே போனீங்க ஆளையே காணலை
ரெண்டு மூணு நாளா என் ஃபிரண்டோட ஊர் சுத்தப்போயிட்டேம்பா...அதான்.
உங்களுக்கென்னண்ணே.... நீங்கள்லாம் மந்திரி மாதிரி...ஜாலியா இருக்கலாம்...
யோவ்..யாருய்யா சொன்னது மந்திரின்னா ஜாலியா இருக்கலாம்னு....மந்திரியா இருக்கவங்களுக்குத்தான் அந்த பயம் தெரியும். அது தலைக்கு மேல தொங்குற கத்தி மதிரின்னு
என்ணண்ணே...கோபப்படுறீங்க?...
பின்னே என்னய்யா....பாவம் நம்ம மந்திரிகளெல்லாம் எப்ப யாருக்கு மந்திரிப்பதவி போகுமோன்னு பயந்து போய் இருக்காங்க....
அப்படின்னா.... நித்திய கண்டம்..பூரண ஆயுசுன்னு சொல்லுங்க....
நீ சொல்றதுல ஒரு பாதி உண்மை.அதாவது நித்திய கண்டம் தான் ஆனா, பூரண ஆயுசில்லை. அல்பாயுசு....மந்திரி பதவிகளுக்கு... நேத்துக்கூட ரெண்டுபேரை நீக்கி, ரெண்டுபேரை சேர்த்திருக்காங்க ஜெயலலிதா....
ஆமாம்...காலைல நியூஸ்ல சொன்னாங்க...எதுக்கு இப்படி?
யாருக்குத்தெரியும்?...எல்லாம் ஜெயாவுக்குத்தான் வெளிச்சம். அவங்க மந்திரிசபை...உக்காருன்னா மந்திரி...எந்திரின்னா மாஜி
அதுக்காக இப்படியா? எட்டுமாசத்துக்கு ஏழுதடவை மாத்துவாங்க? சிவபதிய மூனு மாசத்துக்கு முன்னாடித்தான் பதவிலேர்ந்து தூக்கினாங்க...இப்ப மறுபடியும் சேர்த்திருக்காங்க....இது எத்தனை நாளைக்கோ?
எல்லாம் அவங்க இஷ்டம்....இதுல நம்ம என்ன கேக்கறது?
இதுமாதிரி மக்களுக்கும் ரீகால் வசதி இருந்தா எப்படி இருக்கும்?
என்ன ஆறுமாசத்துக்கு ஒரு முதலமைச்சரை மாற்றி மாற்றி விளையாடலாம். அதுக்குத்தான் நமக்கு கொடுப்பினை இல்லையே....
அதுசரி....இந்த அக்ரி கிருஷ்ணமூர்த்திய போன வாரம்தானே இலாகா மாத்துனாங்க...இப்ப டிஸ்மிஸ் பன்னிருக்காங்களே...இதை போனவாரமே செஞ்சிருக்கலாமே?
செஞ்சிருக்கலாம் தான். நம்ம கவர்னர் சும்மாதானே இருக்கார். வாராவாரம் வேலை வைப்பமேன்னு இப்படி பன்றாங்க போல...
கவர்னருக்கு நல்ல வேலைதான் கொடுத்திருக்காங்க....
Post a Comment