News Update :
Home » » கலியாணம் கட்டாத பசங்களின் ஹவுஸ்புல் திருவிழா!

கலியாணம் கட்டாத பசங்களின் ஹவுஸ்புல் திருவிழா!

Penulis : karthik on Friday, 27 January 2012 | 03:53


அபாய அறிவிப்பு / முன் எச்சரிக்கை: இப் பதிவு குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், தாய்க் குலங்களுக்கும் மற்றும் கலாச்சார காவலர்களுக்கும் உகந்தது அல்ல. ஆனாலும் ஆர்வமுள்ளவங்க படிக்கலாம். விரும்பின் கமெண்ட் கூடப் போட்டுக்கலாம். விருப்பமில்லைன்னா படிச்ச தடயம் இல்லாம சாமி குத்தம் வர முன்னதா எஸ்கேப் ஆகிடலாம். அலுவலகங்களிலும்,பொது இடங்களிலும் இப் பதிவினைப் படிக்க விரும்புவோர் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. "கலியாணம் கட்டினவங்க இப் பதிவினைப் படிக்க முடியாதா?" அப்படீன்னு உங்களுக்கு இப்போ லைட்டா ஒரு டவுட்டு வரலாம். அவங்களும் படிக்கலாமுங்க. இனி பதிவிற்குள் நுழைவோமா?
சனீஸ்வரனுக்கு நெய் விளக்கு எரிக்கிறாரோ? டவுட்டு!
மகிந்த ராஜபக்ஸேவை பீடித்திருக்கும் மரண பயம்!

நம்ம ஜனாதிபதிக்கு மந்திர தந்திரங்கள், சூனியம், ஆன்மீகம், அருள்வாக்கு ஆகியவற்றில் அளவில்லாத நம்பிக்கை இருக்குங்க. தன்னோட காலுக்கு கீழே எலி பாஞ்சாலும் அசராத ஆளு, எதிர்காலத்தில் புலி பாஞ்சிடும் என்ற அச்சத்தில் அடிக்கடி தனது கைரேகை, ஜாதகம், முதலியவற்றை பார்த்து கவலையை போக்கிட்டு இருக்காரு. இந்த வருடத்துடன் மகிந்தரின் ஆட்சிக்கு வேட்டு வைக்கப்படும் என்று ஜோதிடர்கள் விஜய் டீவி நிகழ்ச்சியில் ஓர் செய்தியை சொல்லியிருந்தாங்க. இதனாலே ரொம்பவும் ஆடிப் போயிட்டாரு நம்மாளு! தமிழர்களையே நடு நடுங்க வைத்த ஆளை ஒரு ஜோதிடச் செய்தி கதி கலங்க வைச்சிட்டு இருக்குது என்பது மகா காமெடியா இருக்குங்க. 

மீனவர் பிரச்சினையை தீர்க்க இலங்கை ஒப்பந்தம்:

பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுகின்ற கதையாக இலங்கை அரசியல்வாதிகள் தமிழக மீனவர் பிரச்சினையில் தமது சுய நலத்தினை அடிக்கடி வெளிப்படுத்தி வர்றாங்க. இதன் ஒரு கட்டமாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அங்கிள் அசத்தலான ஓர் ஐடியாவை கொடுத்திருக்கிறாங்க. ரெண்டு நாட்டுக்காரங்களும் ஒன்னா அமர்ந்து பேசி, ஒபந்தம் செஞ்சு ஒரு அட்டவணைப்படி ரெண்டு நாட்டுக்காரங்களும் சுதந்திரமாக கடலில் மீன்பிடிக்க அனுமதிப்பது தான் அந்த ஐடியா. 

இந்த ஐடியாவை பரிசீலித்த இலங்கை அரசியல் வியாதிங்க கலாம் சார்கிட்ட சரின்னு சொல்லியிருக்காங்க.ஆனால் இப்போ மேட்டர் என்னான்ன...மீனவர்களை சுட்டுப்புட்டு நாங்க சுடலை என்று சொன்ன ஆளுங்க.ஒவ்வோர் நாளும் மீனை அளிப்புட்டு மறுபடியும் கபடி விளையாடமாட்டாங்க என்பதற்கு என்ன நிச்சயம்? கேக்கிறவன் கேனையன் என்றால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்! ஒரு விஞ்ஞானியோட காதில கூட பூச்சுத்த கிளம்புறாங்க நம்ம நாட்டு அரசியல்வியாதிங்க. என்னா கொடுமை!! 

அம்மாவின் அந்த ஆசையும், ஐயாவின் இந்த குமுறலும்!

நம்ம அம்மாவிற்கு அதாங்க மம்மிக்கு பிரதமர் ஆகும் ஆசையினை; 
சோ என்று மழை பொழியா குறையாக சோ ஐயா ஊட்டியிருக்காரு. அம்மாவும் பத்து வருஷ காலமா அடி மனசினுள் புதைத்து வைச்சிருந்த ஆசையினை சோ ஐயா முகர்ந்து பார்த்து உலகறியச் செய்திட்டாங்களே என்று சந்தோசத்தில இருக்காங்க. 
அட தூங்கிட்டு இருந்த நம்ம ஐயா எப்போ விழிச்சுக்கிட்டாரோ தெரியலை. திடீரென்று ஞானோஸ்தயம் பெற்றவராக அம்மாவின் பிரதமர் கனவிற்கு வேட்டு வைப்பது போல, சோனியா ஆன்டியை பிரதமர் ஆக்கிப் பார்ப்பேனே தவிர, அம்மாவை பிரதமராக விடமாட்டேன் என்று புலம்பியிருக்காரு! 
தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேணுமுங்க?

நடிகையின் குளியலுக்காக தன் வாழ்க்கையை துறந்த பதிவர்:

பிரான்ஸில வாழும் பயபுள்ளை ஒருத்தன் ஒரு பழைய நடிகையோட படத்திற்கு ரொம்பவே ரசிகனாகிட்டானுங்க. பேஸ்புக், டுவிட்டர், என எல்லா இடத்திலும் அதே நடிகையைப் பத்தியே பேசுங்க. என்ரா சின்ராசு! இந்தப் பதிவர் காட்டான்; நடிகை மேல ரொம்பவே பைத்தியமா அலையுறாரே அப்படீன்னு நினைச்சிட்டு, ஆளோட பேசிப் பார்த்தேனுங்க.
அது ஒன்னும் இல்லைடா நிரூ! அந்த நடிகை பத்மினி இருக்காங்களே! அவங்க குளிப்பதற்காக ஜாக்கட்டை கழற்றும் போது ரயில் வந்து மிகுதி சீனையும் மறைக்குதடா. ஸோ...ரயிலு எப்போ விலகும், பத்மினியின் ஜாக்கட் எப்போ நழுவும் அப்படீன்னு நானும் வருஷக் கணக்கா பார்த்திட்டே இருக்கேன்! ரயிலும் விலகுவதாக காணலை! பத்மினியின் ஜாக்கட்டும் நழுவுவதை காண முடியலைன்னு! சொல்லி...ஓ என்று அழுதார் பாருங்க! ஸப்பா...என்னா ஒரு கொடூரம்! 
தனுஷ் ஸ்ருதி கொல வெறியால் கொடூரமாகிப் போன ரஜினி வீடு!

நம்ம தனுஷ் சார் கொல வெறிப் பாட்டை வெறும் ஆறு நிமிஷத்தில எழுதி உலகம் எல்லாம் ரொம்பவே பிரலமாகியிருக்காருங்க. அத்தோடு நின்னாரா! ஒரேயொரு பார்வையால ஸ்ருதி மேடத்தையும் சாய்ச்சுப்புட்டாங்களே அப்படீன்னு கிசு கிசுக்கள் தோன்றும் வண்ணம் என்னத்தையோ பத்த வைச்சிருக்காரு! இந்த கிசு கிசுக்களை அறிந்த ரஜினிசார் குடும்பத்தினர் எல்லோரும் தனுஷ் மேல கொல வெறியாகிட்டாங்களாம்! மொத்தத்தில சூப்பர் ஸ்டார் வீட்டுக்கும் மருமகன் ஆகிட்டாரு தனுஷ். வெகு சீக்கிரத்தில் கலைஞானி குடும்பத்திற்கும் மருமகனாகிடுவாரோ! டவுட்டு! 

பதிவர் முரண்:

பத்மினி மேலே காதல் கொண்டேன்! பரிசாய் கிடைத்தது பழைய பாவாடை!
ஹன்சிகா மேலே காதல் கொண்டேன்! கரும்பாய் இனித்தது கலர் புல் கனவு!

பதிவர் ஜோதிடம்:

பதிவுலகப் பத்மினி ரசிகர் மன்றத்தினரும்,ஹன்சிகா ரசிகர் மன்றத்தினரும் அண்மைக் காலமாக ஆண்(ன்)மீக வாதிகளா மாறிட்டு வாறாங்க. 
"பத்மினி மேடத்தின் பழைய சூடான காட்சிகளைப் பார்த்து போரடிக்குதே என நினைத்து ஹன்சிகா மேடத்திற்கு மன்றம் அமைத்து, கோயில் கட்டுறது வரைக்கும் முயற்சி செய்திருக்கிறோம்! நம்ம நேரம் நல்லா இல்லை என்பதாலோ என்னவோ? அம்மணியும் பழைய காட்சிகளைப் பார்த்து பஜனை பண்ணி,அர்ச்சனை செய்யப் பண்ணிட்டாங்க"  அப்படீன்னு புலம்பத் தொடங்கியிருக்காங்க. இந்த ரசிகர் மன்ற உறுப்பினர்கள்.
அம்மணியின் அடுத்த படம் வரலைன்னா, 1008 தேங்காய்களை அடித்து பதிவர் அர்ச்சனை என்ற பெயரில பேப்பரில் மாலை செஞ்சு வீதி உலா வருவதே சிறந்த வழின்னு ஒரு ஜோதிடரும் ஐடியா வேறை கொடுத்திருக்காரு! இந்த ஹன்சிகா மேனியா எங்கே போய் முடியப் போகுதோ?

பதிவர் பலிபாடல்! 

அடிக்கடி கனவில் வருபவள் பெயர் கண்டு பிடித்தேன் - லக்ஸி
ஆசையை தூண்டி மனதை அலைய வைக்கும் அவளோ(ர்) - செக்ஸி
பதிவை படிக்கையில் நினைவினை சிதறடிக்கிறாள் நடிகை - தப்ஸி
கனவினில் வாலிப மனசும் கழிவதால் நிகழ்ந்திடாதோ கலியாண காட்சி!

பதிவர் குசும்பும் - குழப்பமும்!
இவங்க ரெண்டு பேரும் என்ன பண்ணிக்கிட்டிருக்காங்க? உலக சாதனை ஏதாச்சும் பண்ண ட்ரை பண்றாங்களோ!!
*************************************************************************************************************
பதிவர்களுக்கோர் நற் செய்தி!
பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கின்ற ஓர் செய்தியினை தமிழ் நண்பர்கள் இணையத் தளத்தினர் நேற்றைய தினம் வெளியிட்டிருக்கிறார்கள். 
இவ்வளவு நாளும் தமது பதிவுகளை இணைக்க விரும்பும் பதிவர்களின் முழுப் பதிவினையும் திரட்டிக் கொண்டிருந்த தமிழ் நண்பர்கள் தளமானது இன்று முதல்; தமிழ் நண்பர்கள் தளத்திலிருந்து உங்கள் தளத்திற்கு வாசகர்கள் வருகை தந்து முழுப் பதிவினையும் படிக்கின்ற வசதியினை அறிமுகப்படுத்துகின்றது. 

தமிழ் நண்பர்கள் தளமானது இன்று முதல் திரட்டியாகச் செயற்படத் தொடங்கியிருக்கிறது. ஆர்வமுள்ள பதிவர்கள் தமிழ் நண்பர்கள் தளத்திற்குச் சென்று, உங்கள் பதிவுகளையும் இணைத்துக் கொள்ள விரும்பின் கீழே உள்ள முகவரியில் கிளிக் செய்யுங்கள்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger