News Update :
Home » » முன்னாள் கர்நாடகா முதல்வர் பங்காரப்பா மரணம்

முன்னாள் கர்நாடகா முதல்வர் பங்காரப்பா மரணம்

Penulis : karthik on Sunday, 25 December 2011 | 22:27

முன்னாள் கர்நாடகா முதல்வர் பங்காரப்பா மரணம்

  bangarappa

பெங்களூர்:கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான எஸ்.பங்காரப்பா  (வயது-79) மரணமடைந்தார்.  சிறுநீரகம் தொடர்பான நோயை தொடர்ந்து பெங்களூரில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

1967-ம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு தனது  அரசியல் வாழ்க்கையை துவக்கினார் பங்காரப்பா.   தொடர்ந்து கர்நாடகா விகாஸ்  கட்சி, கர்நாடகா காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளை துவக்கினார். பின்னர்  பா.ஜ. கட்சியிலும் (2003), சமாஜ்வாதி கட்சியிலும், (2005-2009) சேர்ந்து எம்.பி. பதவி வகித்தார். தற்போது முன்னாள் பிரதமர்  தேவகவுடா தலைமையிலான  மதசார்பற்ற ஜனதாதள கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் இருந்து வந்தார்.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger