News Update :
Home » » தருமி 32

தருமி 32

Penulis : karthik on Sunday, 25 December 2011 | 21:25

'எனக்கு கேக்க மட்டும்தான் தெரியும்'னு தருமி மாதிரி சொல்லி தப்பிச்சுக்கலாம்னு பாத்தேன். ஆனா மணிப்பால்லேர்ந்து நம்ம சகோதரர் வெங்கிராஜா 'நான் பதில் சொல்லியே ஆகணும்னு' எனக்கு அன்புக்கட்டளை போட்டுட்டாரு. ஆகவே இந்த தொடர் பதிவு. துணிஞ்சு படிங்க. எதுக்கும் ஆடுகால் சதை 'துடுக் துடுக்'னா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது!      1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?       'எம்.பி.உதயசூரியன்' என்ற இந்தப் பெயர்..என் அப்பா விரும்பிக் கேட்டு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எனக்கு சூட்டிய பெயர்! எனக்கான அடையாளத்தை ஈஸியாக  தந்த பெயர் என்பதால்..ரொம்பவே பிடிக்கும்.     2.கடைசியாக அழுதது எப்பொழுது?    'மூவேந்தர்களுக்குப் பிறகு தமிழனின் வீரத்தை தரணிக்கு உணர்த்திய 'மாவீரன்'..சாவேந்தி விட்டான் என்ற சதிச்செய்தி கேட்டபோது!      3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?  பிடிக்கும். ஆனாலும் சட்டி அழகா இருக்கறதைவிட..சமையல்தான் ருசியா இருக்கணும்!      4.பிடித்த மதிய உணவு என்ன?  தலைவாழை இலை போட்டு.. கொழஞ்ச சாதத்துல மணக்கமணக்க கோழிக்கொழம்ப ஊத்தி பிசைஞ்சு சாப்புட்டா..ஸ்ஸ்! என்னது? கடிச்சுக்க வஞ்சிரம் ஃப்ரையா? ஆஹா..  'இலையின் சிரிப்பில் இரை'வனைக் கண்டேன்!      5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?  கெடுப்பார் எவருமில்லை. ஆகவே நாம.. எடுப்பார் கைப்பிள்ளை!     6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?  ரெண்டுமே பிடிக்கும். என்ன..கடலில் அலை பயம். அருவியில் தலை பயம்.     7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?  அது பார்க்கும் ஆளைப்பொறுத்து!     8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?  நேர்ல சொல்றேனே சார்!     9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?  'சரி பாதி..தப்பு பாதி'! நல்லா கேக்கறீங்கப்பா கேள்வி!        10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?  .அம்மா, அப்பா, தங்கச்சிகள்.     11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?  சீச்சீ..கூச்சமா இருக்கு!     12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?  ..................     13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?  'வர்ணமே' கூடாதுங்க! வண்ணம்னு கேட்டா..கறுப்பு!     14.பிடித்த மணம்?  சொக்க வைக்கிற 'சொக்கன் ஊர்' மல்லி!     15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?  நம்ம அந்தணன். காரணம் வேறென்ன..ஹாஹாஹா!  உண்மைத்தமிழன். இயல்பான நடையில் உணர்வுபூர்வமாக எழுதுபவர்.  .  16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?  வெங்கிராஜா எழுதிய 'ட்விட்டரோசை'. இதை சுஜாதா படித்திருந்தால் மூணுவரி பாராட்டு நிச்சயம்.     17. பிடித்த விளையாட்டு?  மைதானத்தைப் பொறுத்து!     18.கண்ணாடி அணிபவரா?  மைனஸ் பவரா இருப்பவங்க.. கண்ணாடி அணி'பவரா' இருப்பாங்க. நாம இன்னும் அந்த பவருக்கு வரலை.     19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?  கட்!     20.கடைசியாகப் பார்த்த படம்?  கேக்கறது எமதர்மனா?     21.பிடித்த பருவ காலம் எது?  கெக்கெக்கே...அந்தணன் பதில் சொல்ல அருமையான கேள்வி!     22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?  வண்ணதாசனின் 'நடுகை' சிறுகதைத்தொகுப்பு.  .     23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?  ...................     24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?   ஒவ்வொரு சத்தத்துக்கும் அர்த்தம் உண்டுதானே? முன்பு சில பிடிக்காமல் இருந்தது.   இப்போது உணர்ந்துகொண்டேன்.     25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?  ....................     26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?  கூட்டுத் திறமையே இருக்குங்க!     27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?  இப்படியெல்லாம் பொத்தாம்பொதுவா கேக்கறத ஏத்துக்கமுடியாது!     28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?  வேதம் படிச்சுகிட்டிருக்கு. டிஸ்டர்ப் பண்ணாதீங்க!     29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?  'ஹேர் பின் வளைவுகளில்'  கிளுகிளுப்பாக அனுமதித்து..உச்சத்தில் உச்சிகுளிர வைக்கிற  'மலைகளின் இளவரசி'!     30.எப்படி இருக்கணும்னு ஆசை?  .....................     31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?  ..............     32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?  ஒரு வரியில சொல்லணும்னா..'வாழ்வே ஒரு வரிதான்'!
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger