News Update :
Home » » முல்லைப் பெரியாறு அணையும் - மார்ஷல் நேசமணியும்

முல்லைப் பெரியாறு அணையும் - மார்ஷல் நேசமணியும்

Penulis : karthik on Sunday, 25 December 2011 | 21:29

பேரா டாக்டர் மு. ஆல்பென்ஸ் நதானியேல் எம்.ஏ., பி.ஓ.எல்., பி.எச்டி.,
பயோனியர் குமாரசுவாமிக்கல்லூரி (ஓய்வு), நாகர்கோவில் - 3


சேரநாட்டின் ஒரு பகுதியே திருவிதாங்கூர், திருவிதாங்கூரில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்ட காரணத் தால் நேசமணி திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகளை மீட்க திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை உருவாக்கி தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, பீருமேடு, தேவிகுளம், சித்தூர் ஆகிய 9 பகுதிகளையும் தாய்த் தமிழகத்தோடு இணைக்க வேண்டு மென்று போராடினார். 5.11.1949இல் ம.பொ.சி. தலைமையில் நடைபெற்ற வடஎல்லை மாநாட்டில் நேசமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண் டார். இந்த மாநாட்டில் வடவேங்கடம் முதல் குமரி வரை உள்ள பகுதிகளை இணைத்து தமிழ் மாகாணம் அமைக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. நேசமணி பொறுப்பில் 6.1.1950 வெள்ளியன்று தமிழ்நாடு எல்லை மாநாடு குமரிமுனையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் ம.பொ.சி., பாரதி, கவிமணி தேசிகவி நாயகம் பிள்ளை ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதே காலக் கட்டத்தில் தேவிகுளம், பீருமேடு தமிழர்களை மலையாள அரசு அடக்கி ஒடுக்கியது. 434 தமிழர்களையும் 20 தமிழ் பெண்களையும்; இளைஞர்களையும் ஒரே சிறையில் அடைத்து துன்புறுத் தியது. அவர்கள் அபயக்குரல் கேட்ட தலைவர் நேசமணி, ஜனாப் அப்துல் ரசாக், திரு. சிதம்பரநாதன் ஆகியோர் தேவிகுளம் சென்றனர். அர்கள் 4.7.1954 அன்று மூணாற்றில் வைத்து திருவி தாங்கூர் அரசால் கைது செய்யப் பட்டனர். அங்குள்ள மக்களின் துன்பங்களைப்பற்றி மார்ஷல் நேசமணி குறிப்பிடுகையில் தேவிகுளம், பீருமேடு தாலுகாக்கள் இன்று கண்ணுக்கினிய தோட்டங்களாக மிளிருவதற்கு தமிழன் உழைப்பும் அந்த உழைப்பின் கடுமையால் கொட்டப்பட்ட வியர்வை முத்துக்களுமே காரணமாகும். மனிதன் செல்ல முடியாத இந்த மலைமுகடுகளில் ஏல விவசாயம் வளர்த்த பெருமை முழுதும் தமிழனுக்கே உரியதாகும் என்று பேசினார். அதுமட்டுமல்ல அன்றைய தமிழ் மக்கள் தொகை கணக்கையும் அவர் தந்துள்ளார்.

தாலுகா    தமிழர்கள்    மலையாளிகள்

தோவாளை    42448    698

அகஸ்தீஸ்வரம்    176874    4931

கல்குளம்    205944    36100

விளவங்கோடு    161217    46023

செங்கோட்டை    52432    1677

பீருமேடு    31911    31748

தேவிகுளம்    53394    8282

நெய்யாற்றின்கரை & சித்தூர் :  மக்கள் தொகை கணக்கை மறைத்தனர். மேலும் மலையாளம் தெரிந்த தமிழர்களை மலையாளிகளாக கணக்கில் சேர்த்தனர்.

6.1.1950 தமிழ்நாடு குமரிமுனை எல்லை மாநாடு வரவேற்புரை மார்ஷல் நேசமணி.

முல்லைப் பெரியாறு அணை

நேசமணியின் நாடாளுமன்ற பேச்சில், பூஞ்சாறு மன்னர் பாண்டிய மரபினர். அன்னார் ஒப்பமிடுகின்ற போது மீனாட்சிசுந்தரம் என்றே கையொப்பமிடுவர். மன்னாடியார் என்று அழைக்கப்படுகின்ற நாட்டுப் பிரதானிகளைக் கொண்டு நாட்டு வரி தண்டினான் என்றும் அத்தகைய வரி வசூலிக்கும் பற்றுச்சீட்டில் மதுரை மீனாட்சி துணை என்ற முத்திரை பதிக் கப்பட்டுள்ளதாகக் காணப்படுகிறது. ஆகையால், இந்த, தேவிகுளம், பீருமேடு பகுதிகள் அனைத்தும் பாண்டியனின் இறையாண்மைக்கு உட்பட்டு மதுரை நாயக்கர்களின் அதிகார வரம்புக்குள் 1889 வரையிலும் இருந்தது. எனவே,  மேற்படி பகுதிகள் அனைத்தும் 1889-_க்கு முந்தைய காலம் வரையிலும் திருவிதாங் கூருக்குச் சொந்தமானதாக இருந்த தில்லை என்பதே வரலாறுகள் கூறு கின்ற உண்மை, மாடோன் கே.டி.கெச் பி. தேவன் கம்பெனியாரின் முன் னோர்கள் 1879இல் பூஞ்சாற்று மன்ன ருடன் செய்து கொண்ட முதல் உடன் படிக்கையின் அடிப்படையில் இப்பகுதி கள் அவர்களது அனுபவத்திற்கு வந்துள்ளது என்கிறார் மார்ஷல் நேசமணி.

மேலும் அவர் கூறுகையில், பெரியார் நீர்த்தேக்கத் திட்டத்திற்காக பிரிட்டிஷ் - இந்திய நடுவண் அரசு செயலாளர் திருவிதாங்கூர் மன்னருக்காக ஆவணத் தில் கையொப்பமிட்டுள்ளார். 1889-_இல் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, குத்தகை உரிமையின் கெடுவை நீட்டித்த வேளையில் அது திருவிதாங்கூர் மன்ன ருக்கு சாசனம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதற்கு முன்னால் இப்பகுதி தமிழகத்துடன் இருந்தது என்பது தெரிகிறது. திருவிதாங்கூர் மன்னர் இப்பிரதேசங்களை பூஞ்சாறு மன்னரிட மிருந்து நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் பெற்றிருக்கிறார். இப்பிரதேசங்களுக்கு வந்தபோக மதுரை, மதுரை மாவட்டத்திலுள்ள தேவாரம், கூடலூர், போடிநாயக்கனூர், கம்பம், சிவகிரி போன்ற கணவாய்கள் வழியாக மட்டுமே வந்தடைய முடியும் என் கிறார்.

பெரியாறு நீர்த்தேக்கம்

பெரியார் அணைபற்றி அவர் கூறும்போது, பெரியாறு நீர்த்தேக்கத் திற்கு 13 சதுர மைல்கள் தண்ணீர் கொள்ளளவும் 305 சதுர மைல்கள் தண்ணீர் பிடிப்புப் பகுதியும் உண்டு. இப்பகுதிகள் சென்னை மாநிலத்திற்கு மிகவும் தேவையாகிறது. ஏனெனில் பெரியாறு நீர்த்தேக்கத்தினால் மதுரை மாவட்டத்திலுள்ள 1,90,000 ஏக்கர் நஞ்சை நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கிறது. பெரியாற்றுத் தண்ணீ ரைப் பயன்படுத்தி பெரியகுளம் அருகில் ஒரு நீர்மின் நிலையமும் நிறுவுவதற்கான திட்டத்தை சென்னை அரசு அறிவித்தது. இத்திட்டத்திற்காக பெரியகுளத்தில் ஒரு கால்கோள் விழா ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது என்று 1955 டிசம்பர் 15ஆம் நாள் நேச மணி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

திருவிதாங்கூர் (கேரளம்) தமிழர் போராட்டம் நடைபெற்ற போது கேரள அரசியல்வாதிகள் ஒன்றாக இணைந்து நின்றனர். ஆனால் தமிழக மக்களிட மிருந்தும் அரசியல்வாதிகளிடமிருந்தும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் நேசமணி 9 தாலுகாக்களுக்காகவும் பெரியாறு அணைக்காகவும் வாதாடியபோது எல்லா கேரள எம்.பி.க்களும் எதிர்த் தனர். ஆனால் தமிழகத்திலிருந்து ஒரு எம்.பி.கூட ஆதரவு காட்டவில்லை.

எல்லைக் கமிஷன் மூவரில் ஒருவ ராக சர்தார் கே.எம். பணிக்கரை இந்திய அரசு நியமித்தது. இவர் ஒரு மலை யாளி, மலையாளிகளுக்கு சாதகமாகவே நடந்தார். மேற்கூறிய காரணங்களினால் தமிழகத்தோடு 5 தமிழ்ப் பகுதிகளே இணைந்தன (தோவாளை, அகஸ்தீஸ் வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை), முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கமும் நம்மைவிட்டு கேர ளாவுக்குச் சென்றது. தமிழன் தன் பூமியில் தாகத்திற்கு தண்ணீர் கேட் கிறான்.

முல்லைப் பெரியாறு தண்ணீர்ப் பிரச்சினை, நெய்யாறு தண்ணீர்ப் பிரச்சினை தீர வேண்டுமானால் தென் எல்லைக் காவலன் நேசமணி கேட்ட ஒன்பது தாலுகாக்களுக்கு உட்பட்ட தேவிகுளம், பீருமேடு, நெய்யாற் றின்கரை, சித்தூர், செங்கோட்டையில் பாதி ஆகிய பகுதிகளைத் தமிழகத் துடன் இணைக்க கட்சி சார்பு நிலை யின்றி எல்லா தமிழர்களும் ஒன்றி ணைந்து போராடி மேலே கூறிய நான்கரை தாலுகாக்களையும் தமிழகத் தோடு இணைத்தால் மட்டுமே தமிழகத்தின் உயிர்ப் பிரச்சினையாகிய தண்ணீர் பிரச்சினை நீங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger