இன்று காலையில் கவர்னர் மாளிகைக்கு சென்ற கருணாநிதி பிரதமரிடம் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பேசினார். இந்த பேச்சின்போது கருணாநிதி வலியுறுத்திய விஷயங்கள் வருமாறு: முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும், இது தொடர்பான கோர்ட் உத்தரவை கேரள அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த பிரச்னையில் கேரள அரசு இணங்கி செல்ல அந்த அரசிடம் , பிரதமர் வலியுறுத்தி கூற வேண்டும் என்றும் கோரினார். இலங்கை தமிழர் பிரச்னை குறித்தும் பேசினார். கருணாநிதியுடன் கனிமொழி மற்றும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சென்றனர். 2 ஜி வழக்கில் ஜாமினில் இருக்கும் கிறிஸ்துமஸ் விழா கோர்ட் விடுமுறை என்பதால் கனிமொழி தற்போது சென்னையில் இருக்கிறார்.
கறுப்பு கொடி காட்ட முயற்சி: விஜயகாந்த் கைது : இதற்கிடையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்து பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டப்படும் என தே.மு.தி.க., அறிவித்திருந்தது. இதனையொட்டி டி.நகரில் இருந்து கறுப்புக்கொடியுடன் தனது கட்சி தொண்டர்களுடன் புறப்பட்ட போது விஜயகாந்த் , போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவருடன் 4 எம்.எல்.ஏ.,க்களும் கைதாகினர்.
Post a Comment