ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தெண்டுல்கர் 100வது சதம் அடிக்க விடமாட்டோம் என்று கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தெண்டுல்கர் தனது 100 வது சர்வதேச சதத்தை அடிப்பது நிச்சயம் நிகழக்கூடிய ஒன்றாகும். ஆனால் இந்த டெஸ்ட் போட்டி தொடரில் அது நடக்காது என்று நான் நம்புகிறேன். தெண்டுல்கர் தனது 100 வது சதத்தை அடுத்த தொடரில் அடிப்பார் என்று நம்புகிறேன். தெண்டுல்கர் நீண்டகாலமாக நம்பமுடியாத வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உண்மையிலேயே அவர் பேட்டிங் செய்யும் விதத்தை நான் பார்த்து ரசிக்க கூடியவன். அவர் 100 வது சதத்தை அடித்தால் எல்லா புகழுக்கும், பாராட்டுக்கும் தகுதியானவர். இவ்வாறு மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
Post a Comment