லோக்பால் மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும், தி.மு.க.,உள்பட எதிர்கட்சிகளான பா.ஜ., இடதுசாரிகள் , அ.தி.மு.க., மற்றும் பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், கட்சியினர் வலியுறுத்துவதால் இன்று ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா நிறைவேறுமா என்ற நிலையில் விவாதம் சென்று கொண்டிருக்கிறது.
பலமில்லாத லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாகவும், திருத்தப்பட்ட மசோதா கொண்டு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்றும் இன்றைய ராஜ்யசபாவில் பா.ஜ., கட்சி தலைவர் அருண்ஜெட்லி பேசினார். இவருக்கு பதிலடியாக காங்., மூத்த தலைவர் அபிஷேக்சிங்வி பேசுகையில்: அருண்ஜெட்லி எங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பிளவை ஏற்படுத்த நாரதர் முனி வேலை பார்க்கிறார் என்று கடுமையாக சாடினார். இவரது பேச்சுக்கு பா.ஜ., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கார்ப்ரேட் நிறுவனங்கள் : நாட்டில் உள்ள தனியார் கார்ப்பேரட் நிறுவனங்கள் லோக்பால் கண்காணிப்புக்குள் கொண்டு வரவேண்டும். இதன் மூலம் அரசியல்வாதிகள் இதில் பணம் போடுவதை தடுக்க முடியும். லோக்பால் கூட்டாட்சி தத்துவத்தை கேள்வி எழுப்புகிறது. அரசியலமைப்புக்கு எதிரானதாக இருக்கிறது. வலுவான சட்டமாக இயற்ற வேண்டும். திருத்தப்பட்ட மசோதாவை அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு இடதுசாரி தலைவர்களில் ஒருவராஜ சீததாராம்யெச்ச;ரி பேசினார். லோக்பால் மசோதாவை ராஜ்யசபாவில் பிரதமர் அலுவலக விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி இன்று காலையில் தாக்கல் செய்தார். தாக்க்ல் செய்து பேசிய போது இந்த மசோதா 40 ஆண்டுகாலமாக தற்போது கெண்டு வரப்பட்டுள்ளது. இதில் தேவையான அம்சங்கள் உள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார். அவை துவங்கியதும் இன்று பிரதமர் வரவில்லை. இதனால் எதிர்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். ஒரு கூட்டத்தில் இருப்பதாகவும், அவர் விரைவில் வருவார் , மாலையில் அவர் மசோதா தொடர்பாக பேசுவார் என ஆளும் கட்சியினர் தெரிவித்தனர். ஆனால் தொடர்ந்து எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் அவைத்தலைவர் அன்சாரி அவையை 10 நிமிடங்கள் ஒத்தி வைத்தார். பின்னர் அவை கூடியதும் பிரதமரும் வந்திருந்தார். முன்னதாக இந்த மசோதா நிறைவேற்றுவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து காங்., உயர்நிலை குழு காலையில் அவசரமாக கூடி விவாதித்தது.
லோக்பாலை பொம்மையாக வைத்திருக்கிறது அரசு: இன்றைய விவாதத்தின்போது பேசிய பா.ஜ., மூத்த தலைவரான அருண்ஜெட்லி கூறுகையில்: இந்த மசோதா பலமில்லாததாக உள்ளது. நாங்கள் விரும்புவது பலமான மசோதா. மத்திய அரசு ஒரு பொம்மை போன்ற லோக்பால் மசோதாவை கொண்டு வந்திருக்கிறது. மாநில அரசின் அதிகாரத்தில் தலையிட அனுமதிக்க முடியாது.
சி.பி.ஐ., தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக விளங்க வேண்டும். ஊழல் ஒழிப்பு மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏதுவான விஷயங்கள் இந் மசோதாவில் இல்லை. நாட்டு மக்களின் கருத்ததை நாம் மதிக்க வேண்டும். இந்த மசோதா கொண்டுவரும் நேரத்தில் அனைத்து கட்சியினரின் உண்மை முகத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். இது போன்ற பலமில்லாத இந்த மசோதாவை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அருண்ஜெட்லி பேசினார்.
நாரதர் வேலை பார்க்கிறார் ஜெட்லி: நாரதர் வேலை பார்க்கிறார் அருண் ஜெட்லி என்று காங்., மூத்த தலைவரும் பார்லி., நிலைக்குழுதலைவருமான அபிஷேக்சிங்வி கூறினார். அவர் ராஜ்யசபாவில் பேசுகையில்: இந்த மசோதா கூட்டாச்சி தத்துவத்தை தாக்குவதாக அமையவில்லை. பா,ஜ., நாட்டு மக்களுக்கு அரசு குறித்து தவறான எண்ணத்தை உருவாக்குகிறது. அருண்ஜெட்லி திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவை அவரது கட்சி நலனுக்காக கேட்கிறார். இதுபோன்று பேசி எங்கள் கூட்டணியை உடைக்க முயற்சி செய்கிறார். இது போன்ற நாரதர் வேலைலையத்தான் ஜெட்லி பார்க்கிறார். லோக்பால் மசோதா வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற உண்மை நிலையை பா.ஜ., தெரிவிக்க வேண்டும். தேர்ல் ஆணையம் போல லோக்பால் செயல்பட முடியும். இவ்வாறு சிங்வி பேசினார்.
Post a Comment