தானே புயல் கரையை கடக்கும் போது பலவீனம் ஆவதற்கான அறிகுறிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் புயல் தாக்கும் போது பாதிப்புகள் கடுமையாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே கடல் கொந்தளிப்பு அதிகமாகும் என்பதால் கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழுந்து சீறி வரும் என்பதால் மீன்பிடி படகுகளை பாதுகாத்துக் கொள்ளவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூறை காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் பட்சத்தில் எங்கும் வெள்ளக்காடாகி விடும். தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையை மிரட்டி வரும் தானே புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டு உள்ளது.
அதே போல் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டை `தானே' புயல் தாக்குமா? என்பதை தெரிந்து கொள்ள
இங்கு செல்லவும்
இங்கு செல்லவும்
Post a Comment