நாட்டுக்குத் தேவையான தகவல் என நக்கலடித்தாலும் சரி நடிகை அசினின் குளியலறை செய்தியை சுடச்சுட தருவதில் பெருமைக்கொள்கிறோம். ஹி...ஹி..ஹி..
'காவல் காரன்' என்ற தற்காலிக டைட்டிலுடன் உருவாகி வரும் விஜய்யின் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்துவருகிறது.19-ந்தேதி வரை இப்பகுதியில் ஷூட்டிங் போகிறது. நடிகை அசின் தங்குவதற்காக மலர் லாட்ஜில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. காரைக்குடிக்கு ஷூட்டிங் போகும் சினிமாக்காரர்கள் பெரும்பாலும் தங்குவது இந்த ஹோட்டலில்தான். 'மருத நாயகம்' படப்பிடிப்பு நடந்தபோது கமலே இந்த ஹோட்டலில் தங்கினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
சென்னை சந்துபொந்துகளில் இருக்கும் ஹோட்டலுடன் ஒப்பிடும்போது மலர் தம்மாதுண்டுதான் என்றாலும் சினிமாக்காரர்கள் வர ஆரம்பித்ததிலிருந்து பில்டிங்கையும் பேஸ்மெண்டையும் ஸ்ட்ராங்காக்கி வருகிறது ஹோட்டல் நிர்வாகம். இப்போது நடிகை அசின் தங்கும் அறையிலும் ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளை செய்துள்ளதாம் ஹோட்டல் நிர்வாகம். நடிகை அசின் அறையிலிருக்கும் குளியலறையை ஆல்டேஷன் செய்ய மட்டும் பல லட்சம் செலவு செய்துள்ளனராம். மார்பிள் சுவர்கள், பாத் டப், நீராவி குளியல் போடும் இயந்திரம் என அசினுக்காக பாத்ரூமை பக்காவாக மாற்றியுள்ளனராம்.
த்ரிஷா மாதிரி குளியலறை சச்சை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் அசினை அழைத்துச்சென்று குளியலறையை காட்டிய நிர்வாகம்,காமிரா ஏதும் இல்லை என்ற உறுதியை கொடுக்கவே தங்க சம்மதித்துள்ளாராம் நடிகை அசின். இந்த நேரத்தில் ஒரு பிளாஷ் பேக்.....
'சிவகாசி' படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தபோதும் இதே மலர் லாட்ஜில்தான் சினிமா நடிகை அசினுக்கு அறை ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த ஹோட்டல் வசதி குறைவாக இருப்பதாக கூறி அசின் அடம்பிடித்ததும் விஜய்யின் வேண்டுகோளுக்கு பிறகு வேண்டா வெறுப்பாக தங்கியதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment