நடிகர் தனுஷ் இயக்கும் இந்திப்படத்தில் நடிக்க, நான் ஆர்வமுடன் இருக்கிறேன், என்று பாலிவுட் பிரபல நடிகரும், நடிகை ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் கூறியுள்ளார். தனுஷ் இந்தி படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார். இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. கதாநாயனாக அபிஷேக்பச்சன் நடிக்கப் போவதாகவும், இதனால் தான் அவரை மும்பை சென்று, தனுஷ் சந்தித்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாவை திருமணம் செய்ததில் இருந்து தனுஷை எனக்கு தெரியும். 2003ல் அவரது மன்மதராசா பாடலை படத்தில் பார்த்தேன். செல்வா இயக்கத்தில் அவர் நடித்த படங்களையும் பார்த்து இருக்கிறேன். தனுஷ் சிறந்த நடிகராக இருக்கிறார். தனுஷ் இயக்கத்தில் நான் நடிக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. அவை வெறும் செய்திகள் தான். தனுஷ் இந்திப் படம் இயக்கினால் அதில் நடிக்க மிகவும் சந்தோஷப்படுவேன். ஆனால் நாங்கள் அதுபற்றி எதுவும் விவாதிக்கவில்லை. தனுஷ் இயக்கும் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று அவர் நினைத்தால் அது பெரிய கவுரவம், என்று கூறியுள்ளார்.
Post a Comment