தனிமையில் இனிமை காண முடியுமா?
என் தனிமையின் சோகங்கள்,சந்தோசங்களை கொட்டும் இடம் தான் எனது இந்த நண்பர்கள் வலைப்பதிவு.நான் வலைப்பதிவு எழுத வந்த போது என் நண்பர்கள் யாரும் அதை ஊக்குவிக்கவில்லை ஏன் உனக்கெல்லாம் இந்த வேலை என்று தூற்றினார்கள் இப்ப கூட என் நண்பர்கள் ஒரு சிலரைத்தவிர ஏனையோர் இது எல்லாம் ஒரு வேலையா பிரயோசனமாக எதையாவது செய் என்கின்றார்கள்
ஆனால் என் எழுத்துக்கள் இன்று உலக அரங்கில் வாசிக்கப்படுகின்றது இந்த வலையுலகம் நிறைய நண்பர்களைத்தந்துள்ளது என் சோகத்தையும் மகிழ்ச்சியையும் இங்கே பகிர்ந்து கொள்ளும் போது என் மனம் ஆறுதல் அடைகின்றது.இந்த வலையுலகம் எனக்கு நிறைய நண்பர்களைத்தந்தது அவர்களை நண்பர்கள் என்று சொல்வதை விட உறவுகள் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும்.
மனதில் நிறைய வலியிருந்தாலும் அதை எல்லாம் மனதிலே போட்டு புதைத்துவிட்டு என் எழுத்துக்கள் மூலம் என் தளத்திற்கு வரும் வாசகர்களை திருப்திபடுத்தி வந்துள்ளேன்.சில நேரங்களில் என்னையும் மீறி வலிகள் என் வாழ்க்கையில் வந்துவிடுகின்ற போது மனம் மிகவும் வலிக்கும்.பட்ட காலிலே படும் என்பார்கள் கெட்ட குடியே கெடும் என்பார்கள் இந்த பழமொழியின் அர்த்தத்தை நான் என் வாழ்க்கையில் உணர்ந்து கொண்டுள்ளேன்.
மனதில் கஸ்டம் இருக்கும் போது எழுத்தில் கவனம் செலுத்த முடியவில்லை
எனவே தான் கடந்த சில நாட்களாக வலையுலகில் சீராக இயங்க முடியவில்லை இதனால் வலையுலகைவிட்டு சில நாட்களுக்கு ஒதுங்கி இருப்போம் என்று கூட நினைத்தேன்.ஆனால் என்னை ஆதரித்து என் எழுத்துக்களுக்கு அங்கிகாரம் வழங்கிய உங்களை விட்டு பிரிய மனம் வரவில்லை இதனால் என்ன கஸ்டம் மனதில் இருந்தாலும் என் எழுத்துக்களை ரசிக்கும் உங்களுக்காக நான் தொடர்ந்து எழுதுவேன் இனி சீராக என் தளத்தில் பதிவுகள் வரும் என்பதனை அன்புடன் அறியத்தருகின்றேன்.
எனக்கு மிகவும் பிடித்த இடம்-என் ஊர்(அது எது என்று கேட்கப்படாது)
எனக்கு மிகவும் பிடித்த கலர்-கருப்பு
எனக்கு மிகவும் பிடித்த அரசியல் தலைவர்-பிடல்காஸ்ட்ரோ
எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்-கங்குலி
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்-ரஜனிகாந்
எனக்கு மிகவும் பிடித்த நடிகை-இந்த பட்டியல் நீளம் ஆனால் ஒருவரை சொல்லனும் என்றால் அது ஜஸ்வர்யா ராய் தான்
எனக்கு மிகவும் பிடித்த உடை-கருப்பு ஜுன்ஸ்,கருப்பு டீ சேட்,
பிடித்த வாசகம்-உன் வாழ்க்கை உன் கையில்
பிடித்த உணவு-அம்மாவின் கையால் சாப்பிடும் எந்த உணவும் எனக்குப்பிடிக்கு அது கஞ்சியாக இருந்தாலும் சரி வெரும் தண்ணீராக இருந்தாலும் சரி
பிடித்த திரைப்படங்கள்-ஜோதாஅக்பர்,சங்காய் எக்ஸ்பிரஸ்(சீன மொழி படம்)இது ஒரு மிகசிறந்த நகைச்சுவைப்படம்,தமிழ் படங்களில் பிடித்தது என்றால் இந்த பட்டியல் நீளம் என்பதால் இதில் சொல்ல இடம் காணாது ஆனால் இரண்டு படத்தை கூறுகின்றேன் வெண்ணிலா கபடிக்குழு,அழகர் சாமியின் குதிரை(இந்த படங்களில் தான் நம்ம அபிமான நடிகை சரன்யா மோகன் ஹீரோயினாக நடித்து இருக்காங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்)
கடவுள் பற்றி-நான் நேரில் பாத்துள்ளேன் நமக்கு யார் மேல் மரியாதை இருக்கோ தன் நலம் கருதாது நமக்காக பாடுபம் எல்லோறும் நமக்கு கடவுள்தான் கல்லாய் இருக்கும் கடவுளைவிட இவர்களை கடவுள் என்று சொல்லாம்
காதல்-சந்தித்த பொழுதுகளில் என்னை சிந்திக்கவிடாமல் தீண்டிச்சென்ற அழகிய தென்றல் ஆனால் இதுவரை கிடைக்காத எட்டாக் கனி ஒரு பெண்ணை திகட்ட திகட்ட காதலிக்க ஆசை(ஒருத்தியும் சிக்கிறாள் இல்லை அவ்வ்வ்வ்வ்)
திருமணம்-எனக்காக ஒருத்தி பிறக்காமலா இருப்பாள் அவளை சந்திக்கும் போது என் 30 வது வயதுக்கு பிறகு திருமணம் செய்வேன்(30 வயதுக்கு பிறகுதான் திருமணம் செய்ய வேண்டும் என்பது என் எண்ணம்)
பலம்-எந்த சூழலையும் தைரியமாக எதிர் கொள்ளும் மனநிலை
பலவீனம்-எல்லோறையும் இலகுவில் நம்பிவிடுவேன்
என் பார்வையில் பெண்கள்-உலகிற்கே ஒளிதரும் தெய்வங்கள்
என் பார்வையில் ஆண்கள்-அப்பாவிகள்(ஹி.ஹி.ஹி.ஹி.......)
முஸ்கி-என் தளம் கடந்த சில நாட்கள் ஓப்பின் ஆவதில் பிரச்சனையாக இருக்கு சரி பண்ணவும் என்று எனக்கு தெரிவித்த நண்பன் துஷிக்கும்,மதிப்புக்குறிய யோகா ஜயாவுக்கும் மனமார்ந்த நன்றிகள்,அதிலும் துஷி என்னிடம் பேஸ்புக்கில்,போன்ற தனிப்பட்ட ரீதியில் தொடர்பில் இருப்பவர்.ஆனால் யோகா ஜயா பேஸ்புக்கிலோ இல்லை தனிப்பட்ட ரீதியில் தொடர்பில் இல்லை ஆனாலும் அவர் நண்பர்களின் தளங்கள் மூலம் என் தளம் ஓப்பின் ஆகவில்லை என்று கூறி எனக்கு அந்த விடயத்தை அறியத்தந்தார்.இந்த அன்புக்கு என்ன வென்று சொல்வது இதுதான் என் எழுத்தின் மூலம் நான் சம்பாதித்த உங்கள் அன்பு உறவுகளே.
என் எழுத்துக்கள் பற்றி உங்கள் கருத்துக்களை கருத்துரையில் சொல்ல முடியாத வாசகர்கள் மேலே என் தளத்தில் தொடர்புக்கு என்று ஒரு பக்கம் இருக்கு பாருங்கள் அதன் மூலம் என்னை தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள் அதைவிட nanparkal@yahoo.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் என்னைத்தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்களாம்.
அன்புடன்
உங்கள்
கே.எஸ்.எஸ்.ராஜ்
************************************************************************************************************
இதையும் கொஞ்சம் வாசியுங்கள்-ஈழத்து பதிவர்கள் ஒன்றினைந்து ஈழத்தின் கலை கலாச்சாரம் சம்மந்தமான விடயங்களை சொல்வதற்காகவும் ஈழத்து மொழிநடைகள் வாயிலாக உங்களை மகிழ்விக்கவும் ஈழவயல் என்ற ஒரு தளத்தை ஆரம்பித்து செயற்படுத்தி வருகின்றார்கள்.எங்களை எல்லாம் பதிவுலகில் வளர்த்துவிட்ட நீங்கள் இந்த முயற்சியையும் கைதூக்கிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் ஆதரவுடன் இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளார்கள் அங்கே இருக்கும் பதிவர்கள் எல்லாம் உங்களுக்கு நன்கு அறிமுகமான பதிவர்கள் தான்.ஈழத்தின் மொழி நடையில் அற்புதமான பல சிறந்த சுவாரஸ்யமான பதிவுகளை அங்கே படிக்கலாம் ஈழவயல் தளத்துக்கு செல்ல இங்கே கிளிக்-ஈழவயல்
************************************************************************************************************
இது ச்ச்சும்மா சரன்யா சரன்யா என்னா அழகுப்பா அவ்வ்வ்வ்வ்வ்வ் |
Post a Comment