தாம்பரத்தில் இருந்து அகரம் தென் செல்லும் மாநகர பஸ் (தடம் எண் 51 ஏ) நேற்று மதியம் 12.15க்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டது. பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்தது. 40க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இருந்தனர். டிரைவர் சீனிவாசன், பஸ்ஸை ஓட்டினார். மாணவர்கள் சிலர் டிக்கெட் எடுக்கவில்லை. கண்டக்டர் தர்மலிங்கம், அவர்களை டிக்கெட் எடுக்கும்படி கூறினார். ஆனால் தொடர்ந்து தவிர்த்துவந்தனர். ஒரு கட்டத்தில் கண்டக்டர் டிக்கெட் எடுக்காவிட்டால் தன் வேலை போய்விடும் என்று கூறி மாணவர்களிடம் கெஞ்சி டிக்கெட் எடுக்க வைத்தார்.
அதன்பின் பஸ்சில் தட்டியபடி ''ஒய் திஸ் கொல வெறி கொலவெறிடீ'' என்று பாட்டு பாடி கலாட்டா செய்தபடி மாணவர்கள் சென்றனர். சிலர் படிக்கட்டில் தொங்கியபடி வந்தனர். சேலையூரை தாண்டி கேம்ப் ரோட்டில் பஸ் வந்தது. அங்கு நின்றிருந்த போலீஸ் வாகனம் அருகே டிரைவர் சீனிவாசன், பஸ்ஸை நிறுத்தினார். போலீசாரிடம் மாணவர்கள் தொல்லை தருவதாக கூறினார். மற்ற பயணிகளும் புகார் செய்தனர். இதையடுத்து போலீ சார், மாணவர்களை எச்சரித்தனர். அவர்களை யும் மாணவர்கள் கிண்டல் செய்தனர்.
அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் வாக்குவாதம்,
தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள், பஸ்ஸில் இருந்து இறங்கி வேளச்சேரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீ ஸார் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறினர். பஸ் பயணிகள், வாகனங்களில் செல்பவர்கள் போலீசா ருக்கு ஆதரவாக மாணவர்களை கண்டித்தனர். அதன்பின் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
இவர்கள் சேலையூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் நண்பனை பார்க்க வந்தது தெரிந்தது. இவர்களது ரகளையால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதுகுறித்து கண்டக்டர் தர்மலிங்கம், சேலையூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்
Post a Comment