மதுரை ஆதீனம் மடத்திற்கு அகில பாரத இந்து மகா சபா தேசியத் தலைவர் சக்ரபாணி மகாராஜ், பொதுச் செயலாளர் இந்திரா திவாரி, தமிழ் மாநிலத் தலைவ ர் பாலசுப்ரமணியம் அடங்கிய குழு இன்று வந்தது.
அவர்கள் மதுரை ஆதீனம் அருணகிரி நாதரையும், இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நித்யானந்தாவையும் சந்தித்துப் பேசினர்.
பின்னர் இந்தக் குழுவினர் நிருபர்களிடம் பேசுகையில்,
நித்யானந்தர் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் இந்து மதத்தை நல்ல முறையில் பரப்பி வருகிறார். இந்து மதம் தழைத்தோங்க பல்வேறு முயற்சிகளும் எடுத்து வருகிறார். அவரால் உலகில் உள்ள இந்துக்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றனர்.
அவர் நீடூழி வாழ்ந்து இந்து மதத்திற்கு இன்னமும் பல சாதனைகள் புரிய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறோம். இந்து மதத்தைப் பொறுத்தவரை யாராவது ஒருவர் நல்ல காரியம் செய்தால் சிலர் எதிர்ப்பது வாடிக்கைதான். அதுபோல நித்யானந்தரின் நடவடிக்கைகளை அவர் இந்து மதத்திற்கு ஆற்றி வரும் தொண்டுகளை பொறுக்க முடியாத சிலர் அவருக்கு எதிர்ப்பு� �் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் இந்து மத விரோதிகள்.
நித்யானந்தரின் தொண்டு தொடர எங்கள் அமைப்பு முழு ஆதரவு கொடுக்கும். நித்யானந்தர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் சிறு சிறு பிரச்சனைகள்தான். அவருக்கு உள்ள சக்தியில் இதெல்லாம் சாதாரண விஷயம்.
மதுரை ஆதீனத்தை பிரச்சனையாக்க முயற்சிக்கும் மற்ற ஆதீனங்களின் செயல்களை வண்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களை இந்து மத விரோதிகளாக நாங்கள் பார்க்கிறோம் என்றனர்.
home
Home
Post a Comment