வரும் ஜூன் 6ஆம் தேதி வெள்ளி கிரகம், சூரிய தட்டு வழியே கடக்கும் அபூர்வ நிகழ்வு நடக்கிறது. அப்போது யாரும் வெறும் கண்ணால் சூரியனை பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளி கோளானது சூரிய தட்டின் வழியே ஒரு புள்ளி போன்று நகர்ந்து செல்லும் வெள்ளி இடைநகர்தல் நிகழ்வு வரும் ஜூன் 6ம் தேதி வானில் நிகழ்கிறது. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பி ல் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி பார்த்தசாரதி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரப்புதலுக்கான தேசியக்குழுவின் உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது: ஜூன் 6ஆம் தேதி வெள்ளி கோள் சூரிய தட்டு வழியே ஒரு புள்ளி போன்று கடந்து செல்கிறது. இதனை இந்திய நேரப்படி காலை 5.30 மணி முதல் 10 மணி வரை தொலைநோக்கிகள் மூலம் காணலாம். இது ஒரு அற்புத நிகழ்வு. வெறும் கண்ணால் பார்க்க கூடாது. பாதுகாப்பான முறைய ில் இந்த அரிய நிகழ்வை அனைவரும் காண வேண்டும். இதுபோல் 1641ஆம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை 7 முறை மட்டுமே தெரிந்துள்ளது. இதன் பிறகு டிச.2017ல் தான் இது நிகழும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெள்ளிக்கோளின் இடை நகர்வு நிகழ்வை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொலைநோக்கி மூலமாக பார்க்க ஏற்பாடு செய்து வருகிறது என்று கூறியுள்ளனர் விஞ்ஞானிகள்.
Post a Comment