ரோஜா, பம்பாய் போன்ற படங்களில் நாயக� ��ாக நடித்த அரவிந்த் சாமியின் தங்கை விபா 'மதில் மேல் பூனை' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது இப்படத்தின் இயக்குனர் பரணி ஜெயபால் கூறியதாவது:
வளரும் சிறுவர்களுக்கு நல்ல பெற்றோரும், நல்ல ஆசிரியர்களும் அமைந்து விட்டால் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதில் ஏதேனும் ஒன்று தவறினால் அதன் விளைவு என்ன என்பத� �த்தான் இப்படத்தின் கதையாக்கி இருக்கிறோம்.
படத்தின் இடைவேளைக்கு முன்னால் வரும் 20 நிமிடக் காட்சியை ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு அமைத்திருக்கிறோம். சிறுவர்கள் வாழ்க்கை, காதலர்கள் வாழ்க்கை என இரண்டு தளங ்களில் பயணிக்கும் கதை இடைவேளையில் ஒன்றாக சந்திக்கின்றன. அப்போது பிரச்சினை எழுகிறது. அதன் முடிவு என்ன என்பதை படத்தின் இரண்டாம் பகுதி சொல்லும்.
இப்படத்தின் நாயகனாக விஜய் வசந்த, நாயகியாக புதுமுகம் விபா நடித்திருக்கின்றனர். தம்பி ராமையா காமெடி பகுதியை பார்த்துக் கொள்கிறார்.
பரமக்குடி, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு கள் நடைபெற்றுள்ளன. இது ஓர் ஆக்ஷன், திரில்லர் படமாகும். ரேணிகுண்டா படத்தின் இசையமைப்பாளரான கணேஷ் ராகவேந்திரா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்றார்.
இப்படத்தின் நாயகி விபா கூறியதாவது;
நான் சென்னை பொண்ணு. மாடலிங் பண்ணிட்டிருக்கும் போது கன்னடத்துல 'ஆட்டா' என்ற பட� �் பண்ணினேன். தமிழ்ல இதுதான் எனக்கு முதல் படம். எனது பெரியம்மா மகன் அரவிந்த் சாமி. அதாவது என் அண்ணன்தான் அரவிந்த் சாமி. ''நல்ல படமா பார்த்து பண்ணு. அதுவும் ஹார்ட் வொர்க் பண்ணு''ன்னு அண்ணன் சொ� �்னார்.
இப்படத்துல நான் ஒரு போல்டான ஹீரோயினா நடிச்சிருக்கேன். ஸ்டண்ட்டும் பண்ணியிருக்கேன். கேரளாவிலுள்ள அடர்ந்த காட்டில் ஒன்றரை மாசம் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த அனுபவமே ரொம்ப த்ரில்லிங்கா இருந்தது என்றார்.
இப்படத்தின் இசையமைப்பாளரான கணேஷ் ராகவேந்திரா கூறியதாவது:
இப்படத்துல மொத்தம் 5 பாடல்கள். அதுல இன்டர்வெல் பிளாக்ல ஒரு பாடல் வரும். அதை கவிஞர் தாமரை எழுதியிருக்காங்க. அந்த பாட்டு இப்படத்தின் கதைக்கே உயிர்நாடி. சென்னை பத்தி ஒரு பாட்டு இருக்கு. இதை புதுமுக கவிஞர் அன்சரா பாஸ்கர் எழுதியிருக்கார். இப்பாடலை நடிகர் சிம்பு ப� ��டியிருப்பது இதன் ஹைலைட். படத்தின் இரண்டாம் பாதியில் இரண்டு, மூன்று காடசிகளில் மட்டுமே டயலாக் இருக்கும். மீதமுள்ள காடசிகளை எல்லாம் ரீ ரிக்காடிங் இசையால் நகர்த்தியிருக்கிறோம்.
விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது என்றார்.
Post a Comment