இந்தியா தேடப்படும் ஒரு கொலைக்குற்றவாளியை ஈழத்து எம்.ஜி.ஆர். என புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய எம்.பி. சுதர்சன நாச்ச்சியப்பன்.
இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நேற்று மாலை 5 மணியளவில் யாழ். மத்திய கல்லூரிக்கு வந்தனர்.
இவர்களை இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் வரவேற்றார். அவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவும் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து ஈழத்து எம்.ஜி.ஆர் என அழைத்ததும் அவர் தன்னையே மறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.
சுதர்சன நாச்சியப்பன் பெயர் சூட்டலின்படி டக்ளஸ் தேவானந்தாவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் போலும் என அங்கிருந்த சிலர் பேசிக் கொண்டி ருந்ததைக் காணமுடிந்தது.
எம்.ஜி.ஆரை ஈழமக்கள் போற்றிவருகின்றனர். இந் நிலையில், எந்தவகையில் டக்ளஸ் தேவானந்தா ஈழத்து எம்.ஜி.ஆர். ஆவார் என கொந்தளித்துள்ளனர் ஈழ ஆதரவாளர்கள்.
தமிழகத்தில் உள்ள எம்ஜிஆர் ரசிகர்களும், அதிமுகவினரும் என்ன செய்யப்போகிறார்கள் ....?
Post a Comment