இந்தியா இன்று அணு ஆயுதங� ��களை சுமந்து கொண்டு, 5 ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக சென்று தாக்கும் வல்லமை கொண்ட, அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.
இதுபற்றி சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லியூ வெய்மின் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:-
இந்தியாவின் ஏவுகணை சோதனை பற்றி சீனா முன் எச்சரிக்க� ��யுடன் கவனத்தில் கொண்டுள்ளது. இரு நாடுகளிடையேயும் நல்ல நட்புறவு நிலவி வருகிறது. ஆசிய கண்டத்தில் சீனாவும், இந்தியாவும் சக்தி வாய்ந்த நாடுகளாக வளர்ந்து வருகின்றன.
இந்தியா எங்களுக்கு எதிரி நாடு அல்ல. இரண்டு நாடுகளும் கூட்டுறவு பங்காளிகள். நாங்கள் ஒத்துழைப்புடன் சந்தோஷமாக செயல்படுவோம்.
சமீபத்தில் டெ ல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இரு நாடுகளிடையேயும் ராஜாங்க ரீதியாக நட்புறவை முன்னெடுத்து செல்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Post a Comment