பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவை, கடந்த மாதம் 24-ந்தேதி மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றனர். அவரை விடுவிக்க ஜெயிலில் இருக்கும் தங்கள் அமைப்பைச் சேர்ந்த கைதிகள் 29 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுக ள் நிபந்தனை விதித்தனர்.
ஆனால் அவர்களிடம் 25 பேரை மட்டும் ஜாமீனில் விடுவிப்பதாக ஒடிசா அரசு முதலில் அறிவித்தது. இதை ஏற்க மாவோயிஸ்டுகள் மறுத்து விட்டனர். ஜெயிலில் இருப்பவர்களை ஜாமீனில் விடுவிப் பதோடு மட்டுமல்லாமல், அவர்மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் அரசு வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர்.
இந்நிலையில், எம்.எல்.ஏ.வை விடுதலை செய்ய மாவோயிஸ்டுகள் விதித்திருந்த கெடு, நேற� �று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.
இதற்கிடையில் மாவோயிஸ்டுகளின் ஆந்திரா- ஒடிசா மாநில எல்லை சிறப்பு மண்டல கமிட்டி தலைவர் அருணாவிடம் இருந்து பத்திரிகைகளுக்கு ஒரு ஆடியோ டேப் வந்தது. அதில் ஒடிசா அரசின் செயல்பாடுகள் சரியில்லை. அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே மக்கள் மன்றம் முன்பாக எ ம்.எல்.ஏ. ஹிகாகாவின் தலைவிதி தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுபற்றி மாவோயிஸ்டுகளின் வழக்குகளை நடத்தி வரும் வக்கீல் நிஹார் ரஞ்சன் பட்நாயக் கூறுகையில், மாவோயிஸ்டுகள் குறிப்பிட்டுள்ள மக்கள் மன்றம் அநேகமாக இன்று கூடலாம் என எதி� ��்பார்க்கப்படுகிறது. ஆனால், எந்த இடம், எப்போது என்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கோராபுட் மாவட்டத்தில் நாராயன்பத்னா பகுதியில் காட்டுப்பகுதியில் வைத்து மக்கள் மன்றத்தில் எம்.எல்.ஏ. நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இனி மக்கள் மன்றமே அவர் வித� ��யை தீர்மானிக்கும் என வழக்குரைஞர் நிஹார் ரஞ்சன் பட்நாயக் தெரிவித்தார். இருந்தபோதும் எம்.எல்.ஏ மீதான மக்கள் மன்றத்தில் எந்த விதமான தீர்ப்பு வழங்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் தனக்கு தெரியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment