இலங்கை தமிழர்களின் லட்� �ியமான தனித்தமிழீழம் என்றாவது ஒருநாள் நிச்சயம் உருவாகும் என தி.மு.க தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்களின் எதிர்காலம் பற்றி இன்று பேசிய கருணாநிதி, 'தமிழீழம் என்பது வரலாற்று ரீதியாக தமிழருக்கு வழங்கப்பட வேண்டிய உரிமை. இலங்கை மண்ணில் தமிழர்கள் சிந்திய ரத்தமும், உயிர் பலிகளும் வீண் போகாது. என்றாவது ஒருநாள் � ��ிச்சயம் தமிழீழம் உருவாகும். இலங்கை தமிழர் விவகாரத்தில் ஐ.நா தலையிட்டு, பிற நாடுகளைப் போல் பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழீழத்தை உருவாக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
  ;
மேலும் ஐ.நா.வின் தலையீட்டால் கொசாவோ, மாண்டி நீக்ரோ, தெற்கு சூடான், கிழக்கு தைமூர் போன்ற நாடுகள் உருவானதையும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபற்றி பேசிய கருணாநிதி, 'எம்.பி.க்கள் குழு பயணத்தால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதற்கு பழைய கால உதாரணங்கள் இருக்கின்றன. எனவே அந்தப் பயணத்தை தி.மு.க சார்பாக யாரும் மேற்கொள்ளவில்லை' என்றார்.
இந்நிலையில் கருணாநிதி தற்போது தமிழீழம் நிச்சயம் உருவாகும் என நம்பிக்� ��ை தெரிவித்துள்ளார்.
Post a Comment