ஐ.பி.� �ல் போட்டித் தொடரின் 24-வது லீக் ஆட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும் மோதின.
சென்னை அணியில் கடந்த போட்டியில் விளையாடிய முரளி விஜய், அல்பி மோர்கெல், யோ மகேஷ் ஆகியோர் நீக்கப்பட்டு, விர்த்திமன் சஹா, பொலிஞ்சர், சதாப் ஜகதி ஆகியோர் சேர்க்கப்பட ்டுள்ளார்.
புனே அணியில் கடந்த போட்டியில் விளையாடிய அசோக் திந்தா நீக்கப்பட்டு, முரளி கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.
டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டு பிளிசிஸ்ஸும் பத்ரிநாத்தும் களமிறங்கினர். இந்த ஜோடி 116 ரன்கள் எடுத்தது. அந்நிலையில் டு பிளிஸ்ஸி 58 ரன்னில் ஆட்டம் இழந்தார்.தொடர்ந்து பத்ரிநாத்தும் 57 ரன்னில் வீழ்ந்தார்.
களமிறங்கிய உடனேயே அதிரடியாக ஆட முயன்ற ரெய்னா ரன் ஏதும் எடுக்காமலும், பிராவோ 12 ரன்னிலும் வெளியேறினர்.
ஆட்டத்தின் கடைசி பந்தில் ஜடேஜா 7 ரன்னில் அவுட்டாக, சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 � ��ன்கள் எடுத்தது. டோனி 12 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
புனே அணி தரப்பில் சாமுவேல்ஸ் 3 விக்கெட்டும், நெக்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்த� �ு. இதனால் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Post a Comment