News Update :
Home » » ஏழைகளுக்கான கல்வி சட்டம் சாத்தியம் இல்லை: கபில் சிபல்

ஏழைகளுக்கான கல்வி சட்டம் சாத்தியம் இல்லை: கபில் சிபல்

Penulis : karthik on Sunday 15 April 2012 | 22:01




இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவ- மாணவிகளுக்கு இட ஒதுக்கீடு வழ� ��்க வேண்டும். இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த வியாழக்கிழமை தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தை அமுல் படுத்துவதற்காக மத்திய அரசும்மாநில அரசுகளும் இணைந்து ரூ. 2.3 லட்சம் கோடி செலவிடுகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் கபில் சிபல் தனியார் செய்தி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போதுஇது சாத்தியமில்லை எனவும்இதுபோன்ற செயல்கள் தனியார் பள்ளிகளின் மீது விதிக்கப்படும் சுமை என்றும் தெரிவித்தார்.

மேலும் தனியார் பள்ளிகள் அனைத்து மாணவர்களையும் வெற்றி பெற செய்வற்கு இச்சட்டம் தடையாக இருக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அனைவருக்கும் இலவச கல்வி அளிக்கப்படும். இச்சட்டத்தின்படி முதல் 8-ம் வகுப்புவரை இலவசமாக கல்வி பயில வசதி செய்து தரப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

கபில் சிபல் சொல்வதன் பொருள் என்ன 

ஏழைகள் கல்வி கற்க லாயக்கு இல்லாதவர்கள் என்று தானே..! அவர்கள் படித்தால் ...? ஏழை என்பவன் ஒரு வேளை சோற்றுக்கு கஷ்டப்படுபவன் தான் ஏழை அவனுக்கு கல்வி அறிவு கொடுத்தால் தான் எப்படி, எல்லாம் அதிகார வர்க்கத்தால் அடக்கியாளப்படுகிறோம், தான் எப்படி எல்லாம் ஏமாற்றப்பட்டோம் எபதை அறிந்து கொள்வான் அப்போது கேள்வி கேட்பான் என்பத� ��லா....?

ஏழைக்கு கல்வி கொடுத்தால் தனியார் பள்ளிகளில் அனைத்து மாணவர்களையும் வெற்றி பெற செய்ய முடியாதாம்...அட...கொய்யால இவரு என்ன தனியார் பள்ளிகளின் முதலாளியா ...! வெற்றி பெற வைக்க வேண்டியது தனியார் பள்ளிகளின் கடமை..அதை அவர்கள் பார்த்து கொள்வார்கள்...அப்படி அனைத்து மாணவர்களையும் வெற்றி பெற வைக்க முடியவில்லை என்றால் அது அந்த ப ள்ளிகளின் மதிப்பை தான் குறைக்கும் என்பதால் அவர்கள் நிச்சயம் முடிந்தவரை தரமான கல்வியை கொடுப்பதற்கு தான் நினைப்பார்கள்.(அரசு பள்ளிகள் என்றால் பரவாயில்லை கேட்பதற்கு யார் இருக்கா....). எனவே வெற்றி சதவீதம் பற்றிய கவலை கபில் சிபல் க்கு தேவை இல்லாதது.

முன்பு அரசு எத்தனை தவறுகள் செய்திருக்கிறது ! எத்ததனை மாபெரும் ஊழல்கள் செய்திருக்கிறது என்பது இன்றுவரை சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளை தவிர பொதுமக்களுக்கு ஒரு சில தவறுகளை தவிர தெரியாதவைகள், தெரியாமல் போனவைகள் எத்தனை எத்தனை என்பது கபில் சிபல் போன்றவர்களுக்கு தான் தெரியும்...! ஏன் அன்றைய ஊழல்கள் தெரியாமல் போனது.....த� �ரிந்த்த ஊழல்களும் ஏன் பெரிதுபடுத்த முடியாமல் போனது...! காரணம் அன்றைய காலக்கட்டங்களில் இந்தியாவில் கல்வியறி பெற்றவர்களின் சதவீதம் குறைவு! அதிகாரவர்க்கம் செய்யும் தவறுகள் அவர்களை சென்று சேரவில்லை சேர்ந்தாலும் அதை புரிந்து கொள்ளும் விவரம் அவர்களிடம் இல்லை, அப்படியே புரிந்து கொண்டாலும் அவர்களின் வறுமை அவர்களை அதிகார வர்க்கத்தின் முன் கூனி முறுக்கி நடக்கத்தான் ச� ��ய்ததே தவிர கேள்விகேட்க்கும் மனநிலையில் அவர்கள் இல்லை....!

படித்தவர்கள் கேட்கலாம் என்றால் அவர்கள் அரசு அதிகாரிகளாகவும் அரசில் அங்கம் வைப்பவர்கலாகும் இருந்தனர், அதனால் தான் இவர்களை போன்றவர்கள் இன்று இந்த்த அளவுக்கு செல்வாக்கோடு இருக்க முடிந்தது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் இந்தியாவில் கல்வி அறிவு பெற்றவர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பது � �வர்களை போன்ற அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்களையும் வசதிபடத்த்வர்களின் வயிற்றிலும் புளியை கரைக்க தொடங்கியுள்ளது.... இன்று கல்வியறிவின் வளர்ச்சியாலும், தகவல் தொழில்நுற்பத்தின்  அபரிமிதமான வளர்ச்சியாலும் இவர்கள் செய்யும் தகிடுதத்த வேலைகள் எல்லாம் உடனுக்குடன் மக்களை சென்று சேர்க்கிறது ( தமிழ் நாட்டை பொறுத்தவரை ஊழல்கள், தவறுகள் உடனுக்குடன் மக்களை சென்று சேர்வத� �ல் ஊழலின் ஊற்றுக்கண் நமது தமிழ் ஈனத்தலைவர் கலைஞர் அவர்கள் இலவச டிவி கொடுத்ததன் மூலம் முக்கிய பங்குவகிகிறார். அவர் தேர்தலில் படுத்தொல்வி அடைவதற்கு இந்த இலவச டிவிக்கள் பெரும்பங்கு வகித்ததை மறுக்க முடியாது) உடனுக்குடன் சேர்வதன் விளைவு படித்தவன் கேள்வி கேட்கிறான் படிக்காதவன் கன்னத்தில் அடிக்கிறான். என்றும் இளைஞர் அண்ணன் ராகுல்லிடமே நேருக்கு நேராக  கேள்விக்கேட ்க்கும் துணிச்சல் வந்து விட்டது என்றால் எப்படி சும்மா இருப்பது. இப்படியே போனால் வருங்காலத்தில் தங்களின் வாரிசுகளால் மலம் அள்ளத்தான் முடியுமோ ....! அல்லது அதுக்கும் வழியில்லாமல் போயகுமோ ...என்ற பயத்தின் விளைவில் சிந்தித்ததால் வந்த திட்டம் தான்(தந்திரம்) தான் ஏழைகளுக்கு கல்வியறிவு கொடுக்க இயலாது என்பது. கல்வியறிவு கொடுத்தால் ஏழையால் தங்கள் இடத்திற்கும் பதவிக்கும் � ��ரமுடியும் அவனால் தங்கள் இடத்திற்கும்  பதவிக்கும் ஆபத்து என்பதை தாமதமாக புரிந்து கொண்டதனை விளைவே கபில் சிபலின் இந்த பேச்சு என்பதில் சிறிதும் ஐயம் இல்லை....!!







Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger