
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து மின் உற்பத்தியை தொடங்குவதற்கான பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகின்றன.
கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட ஒப்புதல் வழங்கிய அதே நேரத்தில், கூடங்குளம் உள்ளிட்ட கடலோர கி� �ாமங்களில் ரூ.500 கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனை கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் வரவேற்கவில்லை. இருந்த போதிலும் ரூ.500 கோடி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளவுள்ள பஞ்சாயத்து தலைவர்களுடன் நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அரச ிடமிருந்து 500 கோடி நிதி பெற பஞ்சாயத்து கூட்டங்கள் நடத்தி தீர்மானம் நிறைவேற்றுமாறும் கூறினார். அதன்படி கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாக உள்ள பஞ்சாயத்துகளில் கூட்டம் நடத்தப்பட்டது.
அவ்வாறு கூட்டம் நடத்திய பஞ்சாயத்துக்களில் ஒன்று இடிந்தகரை. இந்த பஞ்சாயத்தின் தலைவி சகாய பெக்ளின் எஜிடின், கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாக கூட்டம் நடத்தியதால், அணுஉலை எதிர்ப்பாளர� ��களுக்கு அவர் மீது ஆத்திரம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இடிந்தகரை பஞ்சாயத்து தலைவி சகாய பெக்ளின் எஜிடின், அவரது கணவர் சகாயராஜ், சகாயராஜின் அண்ணன் ஸ்டாலின், தினேஷ் ஆகியோர் நேற்று இரவு காரில் இடிந்தகரை பகுதியில் வந்தனர்.
அப்போது அவர்களது காரை 10-க்கும் மேற்பட்டோர் அடங்கிய ஒரு கும்பல் வழிமறித்தது. டிரைவர் காரை நிறுத்திய தும், அந்த கும்பலை சேர்ந்தவர்கள், பஞ்சாயத்து தலைவி உள்ளிட்டோரிடம் தகராறு செய்தனர். அப்போது அவர்கள் பஞ்சாயத்து தலைவியின் கணவர் சகாயராஜ், ஸ்டாலின் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த அவர்கள் 2 பேருக்கும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக அவர்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன், மைபா ஜேசுராஜன், ஜெயகுமார் உள்பட 10 பேர் மீது கூடங்குளம் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://devadiyal.blogspot.com
Post a Comment