மும்பையில் நடக்கும் துப்பாக்கி பட ஷூட்டிங்கிற்காக மும்பை செல்வதற்கு முன் விஜய் தன் மகனுடன் சென்னையில் நடக்கும் ஐ.பி.எ� �் கிரிக்கெட் போட்டியை வி.ஐ.பி கேபினில் உட்கார்ந்து பார்க்காமல் ரசிகர்களுடன் ஒருவராய் பார்த்தாராம்.
தற்போது மும்பையில் துப்பாக்கி பட ஷூட்டிங்கில் இருக்கும் விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை புகழ்ந்து பேசியுள்ளார். இது பற்றி பேசிய விஜய் " முருகதாஸ் அமைதியானவர் அதே சமய� ��் கூர்மையான்வரும் கூட. அவரது எளிமை என்னை கவர்ந்துவிட்டது. நான் அவரை 'குட்டிமணிரத்னம்' என அழைக்கலாம் என்று நினைக்கிறேன்.
நான் சில கமெர்ஷியல் படங்கள் தான் நடித்திருக்கிறேன். இந்த படமும் அதைப் போலத் தான். இந்த படத்தின் வெற்றி இயக்குனரையே சேரும். ஒரு நிமிடத்திற்குக் கூட முக்கியத்துவம் அளிப்பவர் தான் முருகதாஸ்" என்று கூறியிருக்கிறார்.
பின்பு படத்தின் ஹீரோயின் காஜல் அகர்வாலை பற்றி பேசிய விஜய் "தமிழ் தெரியவில்லை இவ்வளவு தான் நடிக்க முடியும் என்று கூறாமல், கஷ்டப்பட்டு வசனத்தை புரிந்து கொண்டு சரியான முகபாவத்துடன் தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார் காஜல் அகர்வால். கடின உழைப்புடைய நடிகை காஜல் அகர்வால்" என்று கூறினார்.
மேலும் "துப்பாக்கி என் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். நான் நடித்த கடைசி சில படங்களில் இருந்து மாறுபட்ட படம் இது என்பதால் தனிப்பட்ட முறையில் இந்த படம் எனக்கு மி க முக்கியமான படம். படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறேன்" என்று கூறினார்.
home
Home
Post a Comment