இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்து விட்டது சிங்கள அரசு. எனவே இலங்கையில் தற்போது மிச்சமிருக்கிற தமிழர்களையும் அச்சமின்றி, நிம்மதியாக, சம உரிமைகளுடன் வாழ வழி செய்யும் விதத்தில் இலங்கைக்குப் போகிற இந்திய எம்.பிக்கள் குழு செயல்பட வேண்டும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
ராமநாதபுரம் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கை அரசு ஒரு இனத்தையே அழித்து விட்டது. இந்த நிலையில் இலங்கையில் மீதமிருக்கும் தமிழர்கள் அச்சமில்லாமலும், நிம்மதியாகவும் வாழ வழிசெய்யப்பட வேண்டும். மேலும் அவர்களு க்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்.
இலங்கைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்தியக் குழு செல்கிறது. இந்த குழு இலங்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை பாஜக ஏற்கனவே தெரிவித்துள்ளது என்றார் இல.கணேசன்.
home
Home
Post a Comment