அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகம் விடுத்த அழைப்பை ஏற்று அப்பல்கலைக்கழக விழாவில் கலந்துகொள்ள இந்தி நடிகர் ஷாருக்கான் அமெரிக்கா சென்றார்.
நியூயார்க் விமான நிலையத்தில் ஷாருக்கானை குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி 2 மணி நேரம் விசாரணை நடத்தினர ். உள்துறை அமைச்சகம், சுங்கத்துறை, குடியுரிமை அதிகாரிகளை யேல் பல்கலைக்கழக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசிய பிறகே, ஷாருக்கான் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்த செயலுக்கு இந்தியாவும், ஷாருக்கான் ரசிகர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட விமான நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறு த்தியது.
இதற்கு அமெரிக்கா விளக்கம் அளித்தது. விமான நிலையத்தில் நடிகர் ஷாருக்கானிடம் இனப்பாகுபாடோ அல்லது வேறுவிதமான பாகுபாடோ காட்டப்படவில்லை. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இவரைப்போன்ற முக்கியஸ்தர்கள், முன் கூட்டியே தங்களது அந்தஸ்து, பயண திட்டம் போன்ற விவரங்களை டெல்லியில் உள்ள எங்களது தூதரகத்தில் தெரிவ� ��த்துவிட்டு வந்தால் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்று அமெரிக்கா விளக்கம் அளித்தது.
ஆனால், தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரிலேயே ஷாருக்கானிடம் அவ்வளவு நேரம் விசாரணை நடந்ததாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பிலும், 2008-ல் அகமதாபாத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பிலும் குற்றவாளியான இந்திய� ��் முஜாஹிதின் அமைப்பைச் சேர்ந்த ரியாஸ் பட்கல், நடிகர் ஷாருக்கானின் தீவிர ரசிகன் ஆவான்.
எனவே தனது பெயரை ரியாஸ் பட்கர் என்ற ஷாருக்கான் என்று வைத்துக் கொண்டுள்ளான். இவன் தவிர, இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பலர் ஷாருக்கான் மீது காதல் கொண்டுள்ளனர். அவரது தீவிர ரசிகர்களாக மாறியுள்ளனர்.
இதன் காரணமாக தங்கள் பெயருடன் ஷாருக்கா ன் எனற பெயரையும் தீவிரவாதிகள் இணைத்துக் கொண்டுள்ளனர். அதை மோப்பம் பிடித்துள்ள உளவுப் பிரிவுகளும் சர்வதேச போலீசாரும் (இண்டர்போல்) தீவிரவாத அச்சுறுத்தல் நாடுகளை எச்சரித்துள்ளனர்.
சமீபத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையில் தேடப்பட்டு வரும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர் (லஷ்கர்-இ-தொய்பாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவன்) ஷாருக்கான் என்ற பெ� �ரில் ஒரு பயணிபோல் விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பு இருப்பதாக இண்டர்போல் குறிப்பிட்டு இருந்தது.
இதையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சர்வதேச விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன. எச்சரிக்கை நோட்டீஸ் அடிப்படையிலேயே நியூயார்க் விமான நிலையத்தில் ஷாருக்கானிடம் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்துள்ளது.
http://devadiyal.blogspot.com
Post a Comment