சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் 13-வது பட்டமளிப்பு விழா கல்லூரி தலைவர் லியோ முத்து தலைமையில் நடைபெற்றது. முதன்மை திட்ட அலுவலர் சீதாராமன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கலந்து கொண்டு 865 (688 பொறியியல் பட்டதாரிகள் 177 முது நிலைப்பட்டதாரிகள்) மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது கூறிதாவது:-
இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இதுவரை 12 மில்லியன் இளைஞர்களை சந்தித்துள்ளேன். பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் தங்களது தனித்திறனை வளர்த்து கொள்ள வேண்டும். விடா முயற்சி மற்றும் கடின பயிற்சி மூல� �் தனிப்பட்ட ஆளுமை திறனை வளர்த்து கொள்ள வேண்டும். இதனால் இந்தியா 2020-ல் வல்லரசாகும்.
அனைவருக்கும் தரமான தண்ணீர், மின்சாரம் சம பங்களிப்போடு வழங்கப்பட வேண்டும். விவசாயம், தொழில்துறை மற்றும் சேவை துறை ஒருங்கே வளர்ச்சி அடைய வேண்டும். சமுதாயம் மற்றும் பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும்.
நாட்டில் திறமையான அறிஞர்கள், விஞ்ஞானிக ள், முதலீட்டாளர்கள் சேரும் இடமாக இருக்க வேண்டும். அனைவருக்கும் சிறப்பான சுகாதார வசதி கிடைக்க வேண்டும். நாட்டில் ஊழல் இல்லாத நிர்வாகம் இருக்க வேண்டும். வறுமை, கல்வி அறிவு இன்மை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
வளமான ஆரோக்கியமான பயங்கரவாதம் இல்லாத அமைதியான நாடாக இருக்க வேண்டும். வாழ்வதற்கும் சிறந்த இடமாகவும் இருக்க வ ேண்டும். இதன் மூலம் இந்தியா வல்லரசாகும். உலக அளவில் இப்போது தொழில் நுட்பத்தில் புதிய போக்கு பெருகி வருகிறது. 21-ம் நூற்றாண்டில் புதிய பரிமாணமாக அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் ஒன்றாக செல்கிறது.நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாணவ- மாணவிகள் திறம்பட செயலாற்றி தனித்திறமை களை வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.
விழாவில் முதன்மை நிர்� �ாக அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து, முதன்மை நிதி அதிகாரி ஷர்மிளா ராஜா, கல்லூரி செயலாளர் வாசு, இயக்குனர் ராஜமாணிக்கம், முதன்மை வளர்ச்சி அதிகாரி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
http://actors-hot.blogspot.com
Post a Comment