தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவை ஜோதிடப் பரிகாரத்துக்காகவே போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றியதாக தகவல்கள் கூற� �கின்றன.
அன்று நடந்தது...
போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலாவை திடீரென வெளியேற்றியிருந்தார் ஜெயலலிதா. அத்துடன் மட்டுமின்றி சசிகலா உட்பட ஒட்டுமொத்த மன்னார்குடி கேங்கையே அதிமுகவில் இருந்து வெளியேற்றினார்.
இத்துடன் ஓய்ந்துபோய்விடவில்லை போயஸ் புயல். ராவணன், திவாகரன், எம். நடராஜன், மிடாஸ் மோகன் என மன்னார்குடி கேங்கின் சுற்றமும் நட்பும் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றன. இதேபோல் பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகிவந்த சசிகலாவும்கூட 'போயஸ் தோட்ட" வழக்க� ��ிஞர்களின் கஸ்டடியில் வைத்தே நீதிமன்றத்தில் பதில் சொல்ல வைக்கப்பட்டார்.
இந்நிலையில் திடீரென சசிகலா ஒரு அறிக்கையை வெளியிட அவரது அக்கா ஜெயலலிதாவும் ஏற்றுக் கொள்ள பொட்டி படுக்கையோடு போயஸ் கார்டனில் சசிகலா ஐக்கியமாகிவிட்டார்.
தொடக்கம் முதலே இது டிராமாதான் என்று அடித்துச் சொல்லப்பட்டு வந்த நிலையில் ஜோதிடர்கள் கிசுகிசுக்கும் தகவல் இதனை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.
அஷ்டமத்து சனி?
அதாவது கடந்த டிசம்பர் மாதம் சசிகலாவுக்கு அஷ்டமத்து சனி. இதன் தாக்கம் மிகக் கொடுமையானது என்பதற்காக அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச் சனி என்று ஜோதிடர்கள் வருணிப்பது உண்டு. அப்படிப்பட்ட பாதிப்புக்குள்ளாவோரின் அருகில் இருப்போருக்கும் அஷ்டமத்து சனியின் பாதிப்� �ு அதிகம் இருக்கும் என்கிறது ஜோதிடம்.
இதனால் அஷ்டமத்து சனி ஆட்டிப்படைத்து வரும் சசிகலாவை சட்டென போயஸ் தோட்டத்திலிருந்து விலக்கிவைத்துவிட்டாலே அது பரிகாரம் செய்தது போல ஆகிவிடும் என்று அட்வைஸ் சொல்லப்பட அரங்கேறியது போயஸ் தோட்ட டிராமா என்கின்றனர்.
கட்சிக்கும் சேர்த்தே பரிகாரம்
அதே நேரத்தில்ன் சசிகலாவின் தலையீடு மற்றும் நடவடிக்கைகளால் தமக்கு ஆதாயம் என்கிற நிலையில் அதை அனுமதித்தாலும் சசிகலாவின் பெயரில் அவரது சுற்றமும் நட்பும் ஆடிய ஆட்டத்தை ஜெயலலிதா அவ்வளவாக ரசிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. அஷ்டமத்து சனி பரிகாரத்தின் பேரில் அ திமுகவை ஆட்டிப் படைத்த அத்தனை கிரகங்களையும் அள்ளி சிறையில் போட்டு கட்சிக்கும் திருஷ்டிப் பரிகாரம் செய்துவிட்டார் என்கிறது அதிமுக வட்டாரம்.
வக்கிர குரு
இதனிடையே சிம்மராசிக்காரரான ஜெயலலிதாவுக்கு மே 17-ந் தேதி முதல் ஜெயலலிதாவுக்கு 10-ல் குரு வக்ரம் அடைவதால் சில இடையூறுகளுக்கு வாய்ப்புகள் உண்டு என்றும் கூறப்படுகிறது. இதுக்கு என்ன பரிகாரம் செய்யப் போகிறார்களோ? எத்தனை தலைகள் உருளப்போகின்றனவோ?
Post a Comment